மலேசியாவில் இருந்து 7 கிலோ தங்கம் கடத்திய பயணி கைது!
சென்னை: மலேசியாவில் இருந்து சென்னைக்கு 7 கிலோ தங்கம் கடத்திய பயணியைப் போலீசார் இன்று கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு கோலாம்பூரில் இருந்து இன்று அதிகாலை ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் சூட்கேட்சில் தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அந்த பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் 7 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ. 2.5 கோடியாகும்.
தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது பெயர் குமார் சின்னையா (48). மலேசியாவை சேர்ந்த அவர் அங்கிருந்து அதிக அளவு தங்கம் கடத்தி வந்த போது சிக்கி கொண்டார்.
தங்கம் கொண்டு வருவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னைக்கு 15 கிலோ தங்கம் கடத்திய பயணியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications