சங்கர மட பல்கலை.யில் அட்டகாசம்... கீசரில் கேமரா.. பாத்ரூமில் குளித்த மாணவியை படம் பிடித்த இளைஞர்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்திற்குச் சொந்தமான பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கல்லூரி மாணவிகளை, அவர்கள் ஹாஸ்டல் பாத்ரூமீில் குளிக்கும்போது கீசரில் ரகசியக் கேமராவை வைத்துப் படம் பிடித்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீசந்திரசேகரேந்திர விஸ்வ மகா வித்யாலயா என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள மாணவிகளின் ஹாஸ்டலில் உள்ள பாத்ரூமில் தண்ணீரை சுட வைக்கும் கீசரில் ரவி என்ற 37 வயது நபர் ரகசியக் கேமராவைப் பொருத்தி மாணவிகள் குளிப்பதை ரகசியமாக படம் பிடித்து வந்துள்ளார்.

இந்த ரவி பல்கலைக்கழக எலக்ட்ரீஷியன் ஆவார். புதன்கிழமை காலையில் ஒரு மாணவி குளிக்கப் போயுள்ளார். அப்போது ரகசியக் கேமரா மூலம் ரவி படம் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். இதை ஒரு மாணவி பார்த்து விட்டு கத்திக் கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து சக மாணவிகள் விரை்து வந்தனர். பின்னர் அவரைப் பிடித்து வைத்துக் கொண்டனர். அவரது செல்போனைப் பறித்துப் பார்த்தபோது அதில் மாணவி்கள் குளிக்கும் காட்சிகளும், பிற ஆபாசப் படங்களும் இருந்தது தெரிய வந்தது.
அப்போது ஹாஸ்டல் வார்டன் ஒருவர் செல்போனை வாங்கி அதில் இருந்த மெமரி கார்டை எடுத்து உடைத்து விட்டார். மற்றவர்களுக்குப் பரவி விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு அவர் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபரை போலீஸில் ஒப்படைத்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட மாணவியை ரவி படம் பிடித்தது தொடர்பாக ஆதாரம் எதுவும் இல்லை என்று போலீஸார் கூறியதாக தெரிகிறது.
இதனால் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் கடும் கோபமடைந்து விடுதியை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர். பல்கலைக்கழக விடுதியில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சங்கர மடத்திற்குச் சொந்தமான இந்த பல்கலைக்கழகத்தில் மாணவிகள் குளிப்பதை துணிச்சலுடன் ரகசியக் கேமரா மூலம் படம் பிடிக்கும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications