2 குழந்தைகளின் தாயை மணப்பெண்ணாக நடிக்க வைத்து லாரி உரி்மையாளரை ஏமாற்றிய புரோக்கர் கைது
சேலம்: சேலத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை மணப்பெண்ணாக காட்டி ஒருவரை ஏமாற்றிய புரோக்கர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். லாரி உரிமையாளரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமண புரோக்கர்கள் மூலமாக திருமணத்திற்கு மணப்பெண் பார்த்துள்ளார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் இளங்கோவன், சுரேஷ்குமாருக்கு குமணன்குட்டையில் வசிக்கும் லட்சுமி என்ற பெண்ணை மணப்பெண்ணாக காட்டியுள்ளார். சுரேஷ்குமாருக்கு லட்சுமியை பிடித்ததால் புரோக்கர் இளங்கோவனுக்கு 40 ஆயிரம் கமிஷனாக கொடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்த சுரேஷ்குமார் 27 ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக பத்திரிக்கை அடித்து கொடுத்துவந்துள்ளார். இந்நிலையில் சென்ற வாரத்தில் திடீரென சுரேஷ்குமாரை தொடர்புகொண்ட புரோக்கர் இளங்கோவன் மணப்பெண் லட்சுமியை ஏற்கனவே பார்த்து சென்ற வேறு ஒரு மாப்பிள்ளையிடம் 60 ஆயிரம் அட்வான்ஸ் தொகை வாங்கியதாகவும், இப்போது அந்த மாப்பிள்ளை நீங்கள் பார்த்து சென்ற மணப்பெண் லட்சுமியை கடத்திச் செல்வதாக மிரட்டுவதாகவும். 60 ஆயிரம் கொடுத்துவிட்டால் பிரச்சனை வராது எனக் கூறியுள்ளார். லட்சுமியை திருமணம் செய்து கொள்ளவதற்காக மீண்டும் 60 ஆயிரம் கொடுத்துள்ளார் சுரேஷ்குமார்.
இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு மணமகன் சுரேஷ்குமாரை மீண்டும் தொடர்புகொண்ட புரோக்கர் இளங்கோவன், மணப்பெண் லட்சுமிக்கு உங்களை பிடிக்கவில்லையாம் இதனால் லட்சுமி சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. ஆகவே திருமணத்தை ஒருவாரம் தள்ளிப்போட வேண்டும் எனவும் அதற்குள் லட்சுமியை சமாதானப்படுத்தி வைக்கிறேன் எனவும் புரோக்கர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த சுரேஷ்குமார் நண்பர்களோடு ஈரோடு வந்து மணப்பெண் வீட்டில் பார்த்துள்ளார். வீடு பூட்டி இருந்துள்ளது. அருகில் விசாரித்ததில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி கோயம்புத்தூர் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. பின் கோயம்புத்தூர் சென்று தேடியுள்ளனர்.
ஒருவழியாக புரோக்கர் இளங்கோவனை பிடித்து விசாரிக்கையில் மணப்பெண் லட்சுமியாக நடித்தது சரிதா என்ற பெண் என்றும், ஏற்கனவே திருமணமாகி சரிதாவுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவரை பிரிந்து வாழும் சரிதா புரோக்கர் இளங்கோவனுடன் சேர்ந்து கொண்டு மணப்பெண் போல நடித்து திருமணம் ஆகாத இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை தொழிலாக செய்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த புரோக்கர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications