குடி உயிரையும் குடிக்கும்... பெருச்சாளி கடித்து பரிதாபமாக பலியான “போதை” பிளம்பர்!
கோவை: கோவை மாவட்டத்தில் தூங்கி கொண்டிருந்தபோது பெருச்சாளி கடித்ததில் பிளம்பர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை எற்படுத்தியுள்ளது.
கோவை ஆர்.எஸ் புரம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன திருநீர்மலை. இவரது மகன் முத்துமாணிக்கவாசகம். பிளம்பர் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் ஆகியோர் உள்ளனர். முத்துமாணிக்க வாசகம் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தில் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் முத்துமாணிக்க வாசகத்தின் மனைவி கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் நெகமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தில் உள்ள தாய் வீட்டில் முத்துமாணிக்க வாசகம் தங்கி இருந்தார். வேலைக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்த முத்துமாணிக்கவாசகம் போதையில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது தூங்கிக்கொண்டிருந்த முத்துமாணிக்கவாசகத்தை ஒரு பெருச்சாளி கடித்தது.
இதில் வலி தாங்க முடியாமல் முத்துமாணிக்க வாசகம் அலறி துடித்தார். அதனைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முத்துமாணிக்கவாசகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications