போதையில் மனைவிக்கு அடி - மயங்கிய மனைவி இறந்துவிட்டதாக நினைத்து ஈ.பி ஊழியர் தற்கொலை
சேலம்: சேலத்தில் குடிபோதையில் மனைவியை அடித்த மின்வாரிய ஊழியர் மயங்கி விழுந்த மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், மகுடன்சாவடி அருகிலுள்ள இடங்கணசாலை பேரூராட்சி கே.கே.நகர், மட்டக்காரர் தெருவில் வசித்து வந்தவர் முருகேசன். இவர் இடங்கணசாலை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு லோகேஸ்வரன் என்ற மகனும், ஸ்ரீ அனீஷ் என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசன் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டில் சாப்பிட்ட அவர், ரேஷன் அரிசியில் ஏன் சமையல் செய்தாய், கடையில் அரிசி வாங்கி சாதம் வைக்க வேண்டியது தானே என்று கேட்டு மனைவி செல்வியிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது ஏற்பட்ட கைகலப்பில் முருகேசன் மனைவி செல்வியை தாக்கியுள்ளார். இதில் தலையில் அடிபட்ட செல்வி மயங்கி கீழே விழுந்தார். இதனிடையே குடிபோதையில் இருந்த முருகேசன் தன்னுடைய மனைவியை அடித்ததில் அவர் இறந்து விட்டார் என்று பயந்துள்ளார்.
போதையிலிருந்த அவர் மனைவியை கொலை செய்துவிட்டதாக கருதி தனது வீட்டு குளியல் அறைக்கு சென்று அங்கிருந்த கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மயங்கி கிடந்த செல்வி மயக்கம் தெளிந்து எழுந்தவர் அவர் கணவரை காணவில்லை என்று வீடு முழுவதும் தேடினார். குளியல் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலம் கதவை உடைத்து பார்த்தபோது முருகேசன் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், முருகேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காகாபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications