கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவன்... தற்கொலை செய்த ஜீவிதா - கணவன் கைது
வேறு பெண் உடனான கள்ளத் தொடர்பை கைவிட மறுத்த காரணத்தால் நர்ஸ் ஜீவிதா தற்கொலை செய்து கொண்டார், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஜீவிதாவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: ஓடும் ரயிலில் இருந்து குதித்து இளம் பெண் ஜீவிதா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ரோஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரதட்சணை கேட்டு கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரோஸ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கணவர் உடனான நட்பை விட்டு விடும்படி அவரது பெண் தோழியுடன் ஜீவிதா பேசிய ஆடியோ ஆதாரத்தை வைத்து கணவரை போலீஸார் கைது செய்தனர்.

முள்ளாக குத்திய ரோஸ்
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்கு ஜீவிதா என்ற மகளும், முரளி என்ற மகனும் உள்ளனர். ஜீவிதா நர்ஸ் ஆக பணிபுரிந்து வந்தார். ஜீவிதாவுக்கும் ஆவடியைச் சேர்ந்த முரளியின் மகன் ரோஸ் என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமண வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சிகரமாக இல்லை.

வரதட்சணை கொடுமை
ரோஸ் ஐடி நிறுவனத்தில் பணி செய்கிறார். அவர் தன்னுடன் மென் பொறியாளராக பணியாற்றும் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஜீவிதாவிற்கு இந்த விவரம் தெரிய வரவே இடிந்து போனார் ஜீவிதா. தட்டிகேட்கவே, கணவரின் கொடுமை அதிகரித்தது. வரதட்சணை கேட்டும் கொடுமை படுத்தினர்.

உயிரை மாய்த்த ஜீவிதா
ஒரு வயதுக் குழந்தை இருப்பதால் கணவன் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொண்டார் ஜீவிதா, ஆனாலும் விடாத ரோஸ், 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஜீவிதா கடந்த சனிக்கிழமை மின்சார ரயிலில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கணவரின் கள்ளக்காதலி
ஜீவிதாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ரோஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜீவிதாவின் தாயார் புகார் அளித்திருந்தார். ஜீவிதா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கணவரின் கள்ளக்காதலியிடம் பேசிய ஆடியோவை காவல்நிலையத்தில் அளித்தனர்.

மனம் உடைந்த ஜீவிதா
ஜீவிதா: ஹலோ...
பெண்: ஹலோ சொல்லுங்க என்ன விஷயம்
ஜீவிதா: என் கணவருடன் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்றீர்களா? அவர் ஒத்துக்கொண்டார்.
பெண்: இல்லை அது வந்து
ஜீவிதா: எங்கு போனீர்கள்?
பெண்: சும்மா வெளியில் சென்றோம். அவ்வளவுதான்.
ஜீவிதா: ஏன் சென்றீர்கள், இது முறையா? நான் இது பற்றி நேர்மையாகப் பேசி இருக்கிறேன். இப்படி செய்யலாமா?
பெண்: நான் சும்மா நண்பர் என்ற முறையில் சென்றேன்.
ஜீவிதா: என் கணவருடன் செல்லாதீர்கள். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது உங்களுக்கு தெரியும் அல்லவா?
பெண்: ம் ம்....

கெஞ்சியும் கேட்காத பெண்
ஜீவிதா: அவரது மனைவி நான், எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரியும் அல்லவா?
பெண்: ஆமாம்
ஜீவிதா: பிறகு எதற்கு அவருடன் தொடர்பு வைத்துக்கொள்கிறீர்கள். நான் எத்தனை முறை உங்களிடம் பேசி இருப்பேன்.
பெண்: நீங்கள் இதைப்பற்றி என்னிடம் பேசுவதை விட உங்கள் கணவரை கேளுங்கள்.
ஜீவிதா: அவரிடம் பல முறை பேசிவிட்டேன், அவர் கேட்பதாக இல்லை. நீங்கள் ஏன் அவருடன் வெளியில் செல்கிறீர்கள்.
பெண்: இது பற்றி உங்கள் கணவரிடம் பேசிக்கொள்ளுங்கள்.

உயிரை மாய்த்த ஜீவிதா
இந்த உரையாடல் அந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது. ஜீவிதா பல முறை பொறுமையாக மன்றாடியும் கணவர் கள்ளத் தொடர்பை விடவில்லை. 20 லட்ச ரூபாய் வரதட்சணை தரவே, தற்கொலை செய்து கொண்டார்.
மார்ச் 5ஆம்தேதியன்றுதான் அவரது குழந்தையின் முதலாவது பிறந்த நாள் என்ற சோகம் நடந்துள்ளது.

சிறையில் ரோஸ்
ஜீவிதா பேசிய ஆடியோ ஆதாரத்தை வைத்து ஜீவிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ரோஸை கைது செய்தனர். வரதட்சணை கேட்டு கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரோஸ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கள்ளத்தொடர்பை விட மறுத்து வரதட்சணை கேட்டதால் மனைவியை இழந்து சிறையில் இருக்கிறார் ரோஸ். ஒரு வயது குழந்தைதான் பெற்றோரை இழந்து தவிக்கிறது.












Click it and Unblock the Notifications