2வது மனைவியாக 10ம் வகுப்பு மாணவி- தட்டிகேட்ட மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன்!
நாமக்கல்: நாமக்கல்லில் பத்தாம் வகுப்பு மாணவியை 2 ஆம் திருமணம் செய்த விவகாரத்தில் தட்டிக் கேட்டதற்காக முதல் மனைவியின் தாயார் அரிவாளால் வெட்டப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் பாஸ்கரன் . இவருக்கும், சேந்தமங்கலத்தை சேர்ந்த அன்னபூரணி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் பாஸ்கரன் மரூர்பட்டி வழியாக லாரி வேலைக்கு சென்று வந்த போது அங்குள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்த மாணவியை சில மாதங்களுக்கு முன்பு பாஸ்கரன் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதையறிந்த அன்னபூரணி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்னபூரணியின் தாயார் பானுமதி, பாஸ்கரனிடம் இரண்டாவது திருமணம் செய்தது குறித்து கேட்டிருக்கிறார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பானுமதியை அரிவாளால் வெட்டியிருக்கிறார் பாஸ்கரன். இதில் காயம் அடைந்த பானுமதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications