நடத்தையில் சந்தேகம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கைது
கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கர்ப்பிணியான மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்துள்ள நாயகனை பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமனின் மனைவி நாகம்மாள் என்வருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நாகம்மாள் கணவரை பிரிந்து, மணிகண்டனை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிய மணிகண்டனுக்கு, மனைவி மீது தீராத சந்தேகம். இதனால், இவர்களுக்கு பிறந்த குழந்தையை தன்னுடையது இல்லை எனக்கூறி நாகம்மாளிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த நாகம்மாளுக்கும், மணிகண்டனுக்கும் இடையே நேற்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நாகம்மாளின் கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை எனக் கூறிய மணிகன்டன், தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு தீவிரமடையவே, மனைவியை 5 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் மணிகண்டன். பின்னர் காவல்நிலையத்தில் சரணடையைச் சென்ற மணிகண்டனை, போலீஸார் வழியில் மறித்து கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications