பொங்கலுக்கு போனஸ் தராத முதலாளி - மனைவியைக் கொன்று கொள்ளையடித்த ஊழியர்
சென்னை: சென்னையில் பொங்கலுக்கு பணம் கேட்டு தராத காரணத்தினால் ஹோட்டல் முதலாளியின் மனைவியைக் குத்திக் கொன்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அம்பத்தூர் கே.கே.ரோடு துளசி தெரு வில் வசித்து வருபவர் மைக்கேல்ராஜ். இவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
மைக்கேல்ராஜின் ஹோட் டலில் 4 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தங்குவதற்கு ஹோட்டல் அருகிலேயே அறை ஒன்றையும் மைக்கேல் ராஜ் ஏற்பாடு செய்து கொடுத் திருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற வாலிபரும் கடந்த 4 ஆண்டாக ஹோட்டலில் பணி புரிந்து வந்தார். மைக்கேல்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நன்றாக பழகிய அவர், நம்பிக்கைக்குரிய வராகவும் திகழ்ந்தார்.
இந்நிலையில் விக்னேஸ் வரன், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக மைக்கேல் ராஜிடம் செலவுக்கு பணம் கேட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் ஹோட்டலில் நிறைய வேலை உள்ளது என்று கூறியதுடன் செலவுக்கு பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் கோபம் அடைந்த விக்னேஸ்வரன் கடுமையான மன உளைச்சலிலேயே இருந்து வந்துள்ளார். இதையெல்லாம் மைக்கேல்ராஜ் உணர்ந்திருக்கவில்லை.
நேற்று இரவு 9 மணி அளவில் ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த விக்னேஸ்வரனை அழைத்த மைக்கேல்ராஜ், வீட்டில் இருக்கும் மனைவி அனிதா மற்றும் குழந்தைகள் டான்னிஸ், பிரின்சிகா ஆகியோருக்கு இரவு உணவை கொடுத்து அனுப்பினார்.
அதனை விக்னேஸ்வரன் எடுத்துக் கொண்டு மைக்கேல்ராஜின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த அனிதாவிடம் பொங்கலுக்கு ஊருக்கு செல்ல வேண்டும். பணம் கொடுங்க என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அனிதா, வீட்டில் பணம் இருக்கிறது. எனது கணவர் கூறினால் பணம் தருகிறேன் என்று கூறினார்.
இதையடுத்து, விக்னேஸ்வரனின் மனதில் அனிதாவை கொன்றுவிட்டு வீட்டில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நைசாக சமையல் அறைக்கு சென்ற அவர் அங்கிருந்த கத்தியை எடுத்து, அனிதாவை சரமாரியாக குத்தினார்.
இதில் அவரது கழுத்து, கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்து அனிதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனையடுத்து குழந்தைகளையும் சரமாரியாக தாக்கினார்.அனிதாவும், குழந்தைகளும் வசித்து வந்தது மாடி வீடு என்பதால் அவர்களின் அலறல் சத்தம் எதுவும் வெளியில் கேட்கவில்லை.
இதன்பின்னர் விக்னேஸ் வரன் அனிதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயின் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். நேராக தனது அறைக்கு சென்று, ரத்தக்கறை படிந்த உடைகளை மாற்றி விட்டு, எதுவும் தெரியாதது போல ஹோட்டலுக்கு வந்து வேலை செய்தார்.
இரவு 10 மணி அளவில் ஓட்டலை மூடிவிட்டு மைக்கேல்ராஜ் வீட்டுக்கு சென்றார். அப்போது மனைவி அனிதாவும், குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கதறி அழுதார். மனைவி, குழந்தைகளின் அருகில் சென்று பார்த்தார் அப்போது குழந்தைகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அனிதாவின் உயிர் பிரிந்திருந்தது.
டான்னிஸ் அரசு பொது மருத்துவமனையிலும், பிரின்சிகா எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலை யில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்பத்தூர் போலீசார் மைக்கேல்ராஜின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டிருந்த கேமராவை போலீசார் போட்டு பார்த்தனர். அப்போது அதில் விக்னேஸ்வரன் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீ சார் அவரை தேடினர். விக்னேஸ்வரன் தங்கியிருக் கும் அறைக்கு சென்று பார்த் தனர். அங்கு அவர் எந்தவித பதட்டமின்றி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். போலீசார் விக்னேஸ்வரனை தட்டி எழுப்பி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி னர்.
அப்போது அவர் அனிதாவை கொன்று கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து விக்னேஸ்வரனை போலீ சார் கைது செய்தனர். அறையிலேயே நகை மற்றும் பணத்தை அவர் ஒளித்து வைத்திருந்தார். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications