டீத்தூளில் தங்கம் – கடத்தி வந்த இலங்கை வாலிபர் சென்னை விமானநிலையத்தில் கைது
சென்னை: சென்னை விமானநிலையத்தில் இலங்கையில் இருந்து சாமர்த்தியமாக டீத்தூளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தடைந்த இலங்கை விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக செய்தி வெளியானதால் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளைச் சோதனை செய்தனர்.
அப்போது, சுற்றுலா விசாவில் வந்திருந்த இலங்கை வாலிபர் ஞானமதிகுமார் என்பவர் மீது சந்தேகம் எழுந்த காரணத்தால் அவரை தனியாக அழைத்து சோதனை செய்தனர்.
அவருடைய பேச்சு முன்னுக்கு பின்னாக இருந்ததால் தனியறை விசாரணை நடத்தப்பட்டது. அவரது உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள், டீத்தூளில் தங்கத்தைப் பொடியாக்கி கலந்து கடத்தி வந்ததை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் மதிப்பு கிட்டதட்ட 15 லட்ச ரூபாய் ஆகும்.
தங்கம் கடத்தி வர புது யுக்தியைக் கையாண்ட அந்த இலங்கை வாலிபரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications