திருமணம் செய்வதாக சிறுமியைக் கடத்திய வழக்கு: வட்டி கடைக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை
சென்னை: திருமணம் செய்வதாகக் கூறி மைனர் சிறுமியை கடத்திச்சென்ற வழக்கில் வட்டித்தொழில் செய்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த சோமு என்ற சோமசுந்தரராஜ் (36), வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். தாயாரிடம் வட்டி வசூலிக்கச் சென்ற போது, அவரது மகளைக் கண்ட சோமு, அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி அவரை மயக்கியுள்ளார்.
இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி அனிதாவை திருப்பதிக்கு அழைத்து சென்றுவிட்டார். இதுகுறித்து விஜயா கொடுத்த புகாரின் அடிப்படையில், அயனாவரம் போலீசார் சோமு மீது சிறுமி கடத்தல் மற்றும் பலாத்கார சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி மீனாசதீஷ், ‘சோமசுந்தரராஜ் மீது சுமத்தப்பட்ட பலாத்காரக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மைனர் பெண்ணை கடத்திச்சென்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்‘ எனத் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications