மற்றொரு கோவாவாக உருவாகும் மணப்பாடு! அலைச்சறுக்கு, பீச் வாலிபால் நடத்த தமிழக அரசு முடிவு
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் ஜனவரி 12ம் தேதி முதல் மூன்று நாள்கள் அலைச் சறுக்கு போட்டிகள் நடைபெற உள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை கமிஷனர் ஹர்சஹாய் மீனா தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் நகரிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ளது மணப்பாடு. போர்த்துக்கீசிய கட்டிய கலையுடன் கூடிய பிரமாண்ட வீடுகள், சர்ச்சுகள் என அமைந்திருக்கும் இந்த பெரிய சைஸ் கிராமம், மூன்றுபுறமும், கடலால் சூழப்பட்டு ஒரு தீவு போல காட்சியளிப்பதை பார்ப்பதே தனி அழகு.
மணப்பாட்டில் கடலோரம் அமைந்துள்ள தேவாலயத்தில் இருந்தபடி பார்த்தால் மொத்த ஊரும், அதை கடல் சூழ்ந்து நிற்கும் அழகும் கண்களுக்கு விருந்து படைக்கும். இந்த காட்சிகளையெல்லாம் பார்த்துதான், சமீபகாலமாக பல தமிழ் திரைப்படங்கள் மணப்பாட்டில் சூட் செய்யப்படுகின்றன.

இயற்கை, கடல்
ஜனநாதன் இயக்கத்தில் ஷாம், குட்டிராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'இயற்கை' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் பாடல் உள்ளிட்ட பல முக்கிய காட்சிகள் மணப்பாட்டில் படமாக்கப்பட்டன. நீர் பறவை, மணிரத்தினத்தின் கடல், கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்த நீதானே என் பொன்வசந்தம் போன்ற மைல் கல் பதித்த பல திரைப்படங்கள் மணப்பாட்டில் படமாக்கப்பட்டவையாகும்.

கேரள பயணிகள்
கடல் மட்டுமின்றி, கடலில் இருந்து பிரிந்து செல்லும் சிற்றாறு, உப்பளங்கள் என மணப்பாடு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இங்குள்ள தேவாலயங்களில் வழிபடுவதற்காக கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

அலைச்சறுக்கு
மணப்பாட்டில் இயற்கையாக அமைந்துள்ள இந்த வாய்ப்புகளை, தமிழக சுற்றுலாத்துறை பயன்படுத்திக்கொள்ள முன்வந்துள்ளது. மணப்பாட்டில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் அலைச்சறுக்குப் போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

உகந்த சூழ்நிலை
இக்கூட்டத்தில் தமிழக சுற்றுலாத் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா பேசியது: மணப்பாடு கிராமத்தில் கடந்த ஆண்டு முதல் சுற்றுலாத் துறையின் சார்பில் அலைச்சறுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் மணப்பாடு பகுதியில் மட்டுமே அலைச்சறுக்குப் போட்டிகள் நடத்த உகந்த சூழ்நிலை உள்ளது.

5 வகை அலை சறுக்கு
தமிழ்நாடு சுற்றுலாத் துறை நமது மாநிலத்தில் உள்ள 1,705 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரைகளில் ரூ.100 கோடி மதிப்பில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. குறிப்பாக மணப்பாடு கிராமத்தில் இனிமேல் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையின் மூலம் நடத்தப்படும் மணப்பாடு அலைச்சறுக்குப் போட்டிகள் 5 வகைப் போட்டிகளாக நடத்தப்பட உள்ளன.

பாய்மரப்போட்டி நடக்குது
அலைச்சறுக்குப் போட்டிகள், படகுப் போட்டிகள், காற்றாடி அலைச்சறுக்குப் போட்டிகள், பாய்மரக்கப்பல் போட்டிகள், நின்று கொண்டு துடுப்பு போடும் போட்டிகள் என 5 வகைப் போட்டிகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இவ்வவாண்டு இந்த 5 வகை போட்டிகளுடன் கூடுதலாக பாய்மர அலைச்சறுக்குப் போட்டியும் நடத்தப்பட உள்ளது.

பெண்கள் பீச் வாலிபால்
இது தவிர சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பீச் வாலிபால், கபடி போட்டி, சிறுவர்களுக்கான போட்டிகள், பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். மேலும், தமிழர்களின் பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகள், ஜனவரி 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை மூன்று நாள்கள் நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு 140 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலை சறுக்கை பார்த்து ரசித்தனர் என்பதால் இவ்வாண்டு வெளிநாட்டு பயணிகள் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications