சோகத்தில் முடிந்த 18 மணி நேர உயிர்ப் போராட்டம்... போர்வெல்லில் விழுந்த 3 வயது சிறுமி பலி

விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே தியாகதுருகம் பள்ளகசேரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது தோட்டத்தில் 500 அடி ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். அக்கிணறு சாக்குத் துணியால் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராமச்சந்திரனின் 3வயது மகள் மதுமிதா எதிர்பாராதவிதமாக அந்த ஆழ்துளை கினற்றில் தவறி விழுந்தாள். இதனால் பதறிப் போன ராமச்சந்திரன் குடும்பத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் விரைந்து சென்றனர்.
குழந்தை விழுந்த கிணறு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. 500 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 25 அடி ஆழத்தில்தான் குழந்தை சிக்கியிருப்பதால் உயிருடன் மீட்டுவிடலாம் என்று தீயணைப்புத் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
நவீன கருவிகளுடன் தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி, கிட்டத்தட்ட 18 மணி நேரங்களுக்கு பிறகு இன்று காலை 3 மணியளவில் சிறுமியை மீட்டனர். உடனடியாக சிகிச்சைகாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மதுமிதா. ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக மதுமிதா உயிரிழந்தாள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications