மோடி பற்றி மன்மோகன் சிங் கருத்து: தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம்
சென்னை: நரேந்திர மோடி பற்றி பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ள கருத்துக்கள் சரியானதல்ல. அவரது பேட்டி தெளிவற்றதாக உள்ளது என்று பா.ஜ.க தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குஜராத் கலவரத்துக்கு காரணமான நரேந்திர மோடிக்கு என்னை விமர்சிக்கும் தகுதியில்லை என்றும், ஆயிரக்கணக்கானவர்களை கொன்றவன் நான் அல்ல என்றும் ஆவேசமாக கூறினார்.
மேலும் விலைவாசி உயர்வு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட கேள்விகளுக்கும் மன்மோகன் பதிலளித்தார்.

இந்நிலையில் பிரதமரின் பேட்டி குறித்து புதிய தலைமுறை சேனலில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன், பிரதமரின் பேட்டி தெளிவற்றதாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இலங்கைத் தமிழர் பிரச்னை, ஊழல் குறித்து பிரதமர் மழுப்பலான பதிலை அளித்துள்ளார் என்று கூறிய தமிழிசை, நரேந்திர மோடி குறித்த பிரதமரின் கருத்து சரியல்ல, கண்டனத்திற்கு உரியது என்று கூறினார்.
இதனிடையே திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கும் என்பது பிரதமருக்கு தெரியாதது அல்ல என்று கூறிய ராதாகிருஷ்ணன், தோற்கக் கூடிய காங்கிரசுக்கு தலைமை ஏற்க மன்மோகன் சிங் தயாராக இல்லை என்றார்.
நரேந்திர மோடி குறித்து மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ராதாகிருஷ்ணன், பிரதமர் பதவி குறித்து மன்மோகன் சிங்கின் கருத்து அவரது கருத்து அல்ல என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை பா.ஜ.க நாளை முதல் தொடங்கும் என்றும் பொன்.ராதாகிஷ்ணன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications