கூவத்தூர் ரிசார்ட்ஸ் சென்ற செய்தியாளர்கள் மீது கல் வீச்சு - மன்னார்குடி ரவுடிகள் அட்டகாசம்
கூவத்தூர் ரிசார்ட்ஸ்சில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் இன்று அதிகாலை செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாமல்லபுரம் டிஎஸ்பி ஹெட்விக் ஆகியோர் ஆய்வு நடத்தினர். இதுபற்றி செய்தி சேகரிக்கச் சென்ற ரிப்போர்ட்டர்கள், கேமராமேன்களை கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா 134 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும் பதவியேற்க ஆவண செய்ய வேண்டும் என ஆளுநரிடம் வியாழக்கிழமையன்று கடிதம் அளித்து கோரிக்கை வைத்தார்.

சசிகலாவுக்கு 134 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக 5 எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர். பலர் ரகசியமாகவும் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களை ஒரு சொகுசு பேருந்தில் வைத்து சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள சில ரிசார்ட்களிலும் தங்க வைக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள் மற்றவர்களை சந்திக்கவும், தொலைபேசியில் பேசவும் தடைவிதிக்கப்பட்டது. எம்எல்ஏக்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து அடியாட்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் பகுதி எம்.எல்.ஏ வை காணவில்லை என பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ. ஆர்.டி.ராமசந்திரன், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ. எம்.கீதாவை ஆகியோரை மீட்டு நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என, குன்னம் தொகுதி வாக்காளர் எம்.ஆர்.இளவரசன் மற்றும் வி.ப்ரீத்தா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.டி.செல்வம், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., கூவாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இதனையடுத்து கூவத்தூர் ரிசார்ட்டில் இன்று காலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் காஞ்சிபுரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதுபற்றி செய்தி சேகரிப்பதற்காக கூவத்தூர் ரிசார்ட்ஸ் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை சிலர் நபர்கள் கல் வீசி தாக்கினர். இது சில செய்தியாளர்கள் மீது விழுந்தததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக கூவத்தூர் சாலைகளில் பொதுமக்களும், கிராம மக்களும் சர்வ சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செய்தியாளர்கள் மீதும் இப்போது மன்னார்குடி ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications