"கபாலியின் தோல்வி" என்பதற்காக வைரமுத்துவை கட்டி வைத்து அடிப்பீர்களா? மனுஷ்யபுத்திரன் பாய்ச்சல்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கபாலி படம் தோல்வி அடைந்துவிட்டது என்று சொன்னதற்காக கவிஞர் வைரமுத்துவை கட்டி வைத்து அடிப்பீர்களா? என்று எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் சாடியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் "கபாலி படம் தோல்வி" அடைந்துவிட்டதாக கூறியிருந்தார். வைரமுத்துவின் விமர்சன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதேநேரத்தில் கபாலி படத்தில் பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால்தான் இப்படி வைரமுத்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் என படத் தயாரிப்பாளர் தாணு கூறியிருந்தார். அத்துடன் தம்மிடம் இருந்து 4,000 கபாலி பட டிக்கெட்டுகளையும் வைரமுத்து 'ஓசியில்" வாங்கிச் சென்றதாக கூறியிருந்தார் தாணு.

மனுஷ்யபுத்திரன் ஆதரவு
இந்த நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் தம்முடைய ஃபேஸ்புக்கில் கடுமையான சீற்றத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளதாவது:

கட்டி வெச்சு அடிப்பீங்களோ?
கடவுளையே எதிர்த்த ஒரு மாநிலத்தில் கபாலியை எதிர்க்க முடியாது போலிருக்கிறது. 'கபாலியின் தோல்வி' என்று வைரமுத்து ஒரு வார்த்தை சொன்னால் அதற்காக அவரை இவ்வளவு தூரம் கட்டி வைத்து அடிப்பீர்களா?

சாதிவெறியனா?
உடனே அவர் சாதிவெறியன் ஆகிவிடுவாரா? தினமணி வெளிப்படுத்தியது மிகப்பச்சையான சாதிய அரசியல். அதை எதிர்ப்பதை புரிந்துகொள்ள் முடிகிறது.

தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு
ஆனால் வைரமுத்து அத்தகைய தொனியிலா பேசினார்? விஸ்வரூபம் என்ற படம் அரசியல்மயப்படுத்தப்பட்டதன் மூலம் தமிழர்ககள் அனைவரும் அந்தப் படத்தை தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்.

நியாயமே இல்லையே
இப்போது கபாலி இவ்வளவு தூரம் அரசியல் மயப்படுத்தப்படுவதற்கும் அதே போன்ற காரணம் இருக்கலாம். வைரமுத்து மீதான இந்தத்தாக்குதலுக்கு எந்த நியாயமும் இல்லை. கபாலி ஒரு மசாலா படம். அதை மதம் ஆககாதீர்கள்.
மனுஷ் கருத்தை திமுக ஏற்கிறதோ?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications