சென்னை மற்றும் புறநகரங்களில் கனமழை!
சென்னை: சென்னையில் கோடம்பாக்கம், சூளைமேடு, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில், சென்னையில் கோடம்பாக்கம், அசோக் நகர், தியாகராயர் நகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
அதேபோல் ராயப்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. மேற்கு மாம்பலம், அயனாவரம், வேளச்சேரி, தரமணி, எழும்பூர், அடையார் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழையும், நாகை மாவட்டம் சீர்காழி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications