'அங்க பல பேரு எங்க ஸ்லீப்பர் செல்தான்'.. எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேட்டி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் பலபேர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள்தான், எங்கள் ஸ்லீப்பர் செல்ஸ்தான் என்று எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளது பரபரப்பாகியுள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் பலபேர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள்தான், எங்கள் ஸ்லீப்பர் செல்ஸ்தான் என்று எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெற்றிவேல் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தலைமைக் கழகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் முழு மனதுடன் இல்லை. அவர்களது முகத்தை பார்த்தாலே நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவை நீக்குவதற்கு தற்போது வரிந்து கட்டுக்கிறார்கள். அது நடக்காது. ஆரம்பத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கும்படி சசிகலாவை கெஞ்சியது யார் யார் என்று அனைவருக்கும் தெரியும்.
துணைப் பொது செயலாளரின் நியமனம் செல்லாது என்றால் ஆர்கே நகரில் வாக்கு கேட்டு இவர்கள் அழைத்து வந்தது தவறு. இதிலிருந்து பார்க்கும் போது டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லும். எனவே அவர் நியமிக்கிற அனைத்து பதவிகளும் செல்லுபடியாகும்.
இப்போது பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் கோமாளித்தனமாக பேசுபவர். அவர் மூத்த நிர்வாகி என்பதால் அவரைப் பற்றிய விமர்சனத்தை நான் குறைத்துக் கொள்கிறேன். அவரை 15 ஆண்டுகளாக கட்சியில் சும்மா வைத்திருந்தனர். இப்பொழுது அமைச்சர் பதவி பறிபோய்விடும் என்பதால் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
Recommended Video

ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். நாளேட்டை சட்டப்படி மீட்கப்போவதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இது தனிநபர் நடத்தும் நிறுவனம் என்பது கூட இவர்களுக்கு தெரியவில்லை. தேவைப்பட்டால் நாங்கள் சசிகலாவிடம் சொல்லி ஜெயா டி.வி. மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டை கட்சிக்கு கேட்டு எழுதி தருகிறோம்.
தலைமை கழகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காத 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்ல, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலரும் எங்களுடைய ஸ்லீபர் செல்களாக இருக்கிறார்கள்." என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications