ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் கைது: போலீஸ் விசாரணை !
காஞ்சிபுரம்: ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்தப்பட்ட பல்வேறு தாக்குதலில் தொடர்புடைய மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவரை கியூ பிரிவு போலீசார் நேற்று ஸ்ரீபெரும்புதூரில் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் மயர்பூரைச் சேர்ந்த சுரேந்திர யாதவ் (32). இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பீகாரில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் ஆகியோரை கொலை செய்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அதன் பின்னர் அவர் எங்கு இருந்தார் என்பது தெரியாமல் இருந்தன.
இந்நிலையில் "சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மாவோயிஸ்ட் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சுரேந்திர யாதவ் என்பவரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சென்னை மயிலாப்பூர் காவல்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சுரேந்தர யாதவ் என்கிற அந்த மாவோயிஸ்ட்டிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் ஜார்க்கண்ட் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்" என்று போலீசார் தெரிவித்தனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications