Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்!
சென்னை: அமலாக்கத் துறை ரெய்டில் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோவிடம் இருந்து போதை பொருள் கைப்பற்றப்பட்டது குறித்து மாரிதாஸ் பேசியதற்காக கைது செய்யப்பட்டாரா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிமுக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: யூடியூபர் மாரிதாஸை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பாசிச திமுக அரசின்....
Wait a minute...
ஆட்சி மாறி விட்டதோ?
ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்? பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?
நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க... செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க... யூடியூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க...
What bro... It's very wrong bro..!!
அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் அமலாக்கத் துறையால் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா! ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?
இந்த உண்மைகளை தொடர்புபடுத்தி தானே மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
மாரிதாஸை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்? அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?
ஜனநாயகக் குரலை நெரிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக மாரிதாஸ் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதிமுக குறிப்பிட்டுள்ளது.
அண்மைக்காலமாக முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் ஆகியோர் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டு வந்தவர் மாரிதாஸ். இவர் வலதுசாரி ஆதரவாளர். இவர் ஏஐ மூலம் வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் மதுரையில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட சென்னை சைபர் கிரைம் போலீஸார் சென்று அவரை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தனது வீட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட போலீஸார் வந்துள்ளதாக மாரிதாஸே தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மாரிதாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications