மருதமலை சுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச திருவிழா ஜன.17–ம் தேதி ஆரம்பம்
கோவை: கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலின் தைப்பூச தேரோட்ட திருவிழா வருகிற 17-ம் தேதி நடைபெறுகிறது.
பக்தர்களால் 7-வது படை வீடாக போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச தேரோட்ட திருவிழா வருகிற 17-ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் ஒவ்வொரு நாளும் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 24-ம் தேதி அன்று காலை 9 மணிக்கு தைப்பூச திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 10 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 11.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது.
தேரில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானை சமேத ராய் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 8-ம் திருநாளான 25-ம் தேதி மாலை 5 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 26-ம் தேதி மதியம் 12 மணிக்கு மகா தரிசனமும், மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதலும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடு களை அறநிலையத்துறை துணை ஆணையர் பழனிக்குமார், இணை ஆணையர் இளம்பரிதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications