கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காயம் விலை... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
நாகர்கோவில் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னவெங்காயம், சர்க்கரை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊதுபத்தி கொளுத்தி வைத்தனர். மேலும், சின்ன வெங்காயத்தை மாலையாக கோர்த்து அதை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தனர்.

மார்க்சிஸ்ட் நகர செயலாளர் பெஞ்சமின் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி முன்னிலை வகித்தார். நகர்குழு உறுப்பினர்கள் மோகன், அஸிஸ், பரமசிவம், ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து நகரச் செயலாளர் பெஞ்சமின் கூறியதாவது:
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அப்படியே பின்பற்றிவரும் அதிமுக அரசின் நடவடிக்கை காரணமாக மக்கள் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் ரேஷனில் சக்கரை விலையை உயர்த்தியது மட்டுமல்லாமல் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.180-க்கு மேல் உயர்ந்துள்ளது. சமையல் கேஸ் விலை ரூ.850-க்கும் மேல் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லவிதமான மானியங்களையும் ரத்து செய்யும் நோக்குடன் செயல்படும் அரசை கண்டித்தும் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு பெஞ்சமின் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications