மதுரை வங்கியில் ரூ.10.60 லட்சம் கொள்ளை: மர்ம நபரைப் பிடிக்க 3 தனிப்படைகள்!

மதுரை மகாத்மா காந்தி நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள கட்டிடத்தின் மாடியில் கார்ப்பரேசன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று மாலை ஊழியர்கள் 6 பேர் பணியில் இருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர், வங்கி காசாளர் பானுமதி அருகே சென்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். இதை பார்த்த மற்ற ஊழியர்கள் மிரண்டனர். உடனே அங்கிருந்த அனைவரையும் அந்த முகமூடி இளைஞர் வங்கி மேலாளர் அறைக்கு செல்லுங்கள் இல்லாவிட்டால் பெண் ஊழியரை கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்று கூறினான்.

இதையடுத்து அனைத்து ஊழியர்களும் மேலாளர் அறைக்குள் சென்றனர். அறைக்குள் வைத்து அவர்களை பூட்டிய அந்த ஆசாமி பானுமதியை கத்தி முனையில் அழைத்து சென்று அங்கிருந்த ரூ.10.60 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டான்.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை நடந்தபோது வங்கியில் இருந்த அலாரத்தை அடிக்காதது ஏன்? அங்கிருந்த காவலாளி அப்போது எங்கு சென்றார்? ஒரு சிறிய கத்திக்கு 6 பேரும் பயந்து பதுங்கியது ஏன்? ஆகிய சந்தேகத்தின் பேரில் ஊழியர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மர்ம நபரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications