மேட்டூர் வனப்பகுதியில் ஆயுதப் புதையல்... வீரப்பன் பதுக்கியதா.. புலிகளுடையதா?
மேட்டூர்: சேலம் மேட்டூர் அருகே வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கையெறி குண்டுகள் உள்பட ஆயுத குவியல் வீரப்பனுக்குச் சொந்தமானதா.. புலிகள் பதுக்கியதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகில் பச்சமலை காப்புகாடு உள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக நேற்று முன்தினம் வனத்துறையினர் குழிகள் தோண்டியபோது ஏராளமான ஆயுதங்கள், குண்டுகள் செய்வதற்கான வெடிப் பொருட்கள் சிக்கின.

மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் வந்து, அவற்றை அப்புறப்படுத்தி ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு விடுதலைப்புலிகள் முகாமிட்டு போர் பயிற்சிகள் பெற்றனர். அப்போது விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதா இந்த ஆயுதங்கள்? அல்லது வேறு தீவிரவாத அமைப்புகள் பதுக்கியதா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரப்பன் பதுக்கியதா?

போலீசார் நேற்று காலை அப்பகுதியில் உள்ள முட்புதரில் 3 கையெறி குண்டுகளை கண்டெடுத்தனர். ஆயுத புதையல் கிடைத்த பகுதியில் உள்ள ஒரு சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடயங்கள் இருந்தது. சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டமும் நவீன துப்பாக்கி, கண்ணி வெடிகளை பயன்படுத்தி வந்தது. எனவே, வீரப்பன் கும்பலை சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரும்பு பேரல் சில ஆண்டுகளுக்குள் புதைக்கப்பட்ட பேரல் போல் காணப்படுவதால் இது புலிகளுக்கு சொந்தமானதாக இருக்காது என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications