மாணவிகளிடம் சில்மிஷம் செய்த கணக்கு வாத்தியார்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த கணக்கு ஆசிரியரை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகில் உள்ள கொத்தக்கோட்டையில் இருக்கும் அரசு உயர் நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் பணிபுரியும் கணக்கு ஆசிரியர் செல்வம் தங்களிடம் சில்மிஷம் செய்வதாக மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு கோபம் அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுக்கையிட்டு செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி சண்முகம் போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.
மாணவிகளிடம் சில்மிஷம் செய்த கணக்கு ஆசிரியர் செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்முகம் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications