கூடங்குளம் மின்சாரத்தின் பெரும்பங்கை தமிழகத்துக்கு ஒதுக்க ஜி.கே.வாசன் கோரிக்கை
சென்னை: கூடங்குளம் மின்சாரத்தின் பெரும்பங்கை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கை மற்றும் எண்ணமாகும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யூனிட் 1-ல் உற்பத்தி செய்யப்பட்ட ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட மின்சாரம் போக, ஒதுக்கப்படாத 150 மெகாவாட் மின்சாரத்தில் 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு 2012 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒதுக்கப்பட்டதை நினைவு கூற விரும்புகிறேன்
மீதமுள்ள 50 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கு வழங்க அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய அரசின் பரிசீலனையில் இருந்தது. பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் மீதமுள்ள 50 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்தினுடைய மின் பற்றாக்குறையை கருத்தில் கொள்ளாமல் தமிழகத்திற்கு ஒதுக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இனி உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் பெரும்பங்கு தமிழகத்திற்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications