தங்க நகையை பார்த்ததும் சபலம்.. மயிலாடுதுறை கோயில் திருவிழாவில் தம்பதிக்கு மறக்க முடியாத சம்பவம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள பழையகூடலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமு என்பவரும் அவரது மனைவி அம்சவள்ளி ஆகியோரும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவில் பஙகேற்றுள்ளனர். அப்போது மூதாட்டி அம்சவள்ளியிடம் மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாதவர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கோயில் திருவிழாக்களில் திருடுபவர்கள் ஆங்காங்கே அதிகமாக இருக்கிறார்கள். அந்த வகையில் குத்தாலத்தில் திருடிய தம்பதி சிக்கியுள்ளனர். மயிலாடுதுறை அருகே உள்ள பழையகூடலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமு மற்றும் அவருடைய மனைவி அம்சவள்ளி (வயது70). இந்த தம்பதி கடந்த 28-ந் தேதி கொக்கூர் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு சென்றுள்ளனர். அப்போது அம்சவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச்சென்றனர். இதுதொடர்பாக அம்சவள்ளி பாலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அம்சவள்ளியிடம் தங்க சங்கிலி பறித்தவர்கள் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் குணதலப்பாடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (50), அவருடைய மனைவி வள்ளி (40) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 பவுன் தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரயிலில் திருடியவர் கைது
திருப்பதி -ராமேசுவரம் செல்லும் ரயிலில் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அயானா மாநிலத்தை சேர்ந்த 25 வயதாகும் ஷில்பி என்பவர் திருப்பதியில் இருந்து ராமேசுவரம் செல்வதற்காக திருப்பதி-ராமேசுவரம் விரைவு ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தனது விலை உயர்ந்த செல்போனை ரெயிலில் சார்ஜ் போட்டுள்ளார்.
மயிலாடுதுறைக்கு ரயில் வந்த போது ரயிலில் இருந்து கீழே இறங்கி நின்று விட்டு மீண்டும் ரயிலில் ஏறி தன் இருக்கைக்கு சென்றபோது தான் சார்ஜ் போட்டு வைத்திருந்த செல்போன் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷில்பி உடனடியாக மயிலாடுதுறை ரெயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்து விட்டு ராமேசுவரம் சென்று விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை சப் -இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரித்தனர்.
அப்போது அவரிடம் செல்போன் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் ரயிலில் சார்ஜரில் இருந்த செல்போனை திருடியதாக ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் சீர்காழி ஈசானியத் தெருவை சேர்ந்த சமுத்திரக்கனி மகன் வினோத் (36) என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்ததுடன், செல்போனை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications