மயிலாடுதுறை சிந்துஜா.. ஓடும் பைக்கில் பின்னாடி உட்கார்ந்து கொண்டு செய்த வேலை! ரொம்ப பயங்கரமா இருக்கே
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பட்டப்பகலில், நடுரோட்டில் நடந்த சம்பவத்தை பார்த்து, பொதுமக்கள் அதிர்ந்துவிட்டார்கள்.
மயிலாடுதுறை நகரத்தில் வசித்து வருபவர் ஆகாஷ்.. 24 வயதாகிறது.. பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3ம் வருடம் படித்து வருகிறார்.. இவர் சிந்துஜா என்ற பெண்ணை காதலித்து வருகிறார்..

மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் BA பொருளாதாரம் 2வது வருடம் படித்து வருகிறார் சிந்துஜா.. இவர், கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர்.. சிந்துஜாவும், ஆகாஷை கடந்த 2 வருடமாகவே தீவிரமாக காதலித்து வந்தார்.
இந்நிலையில், ஆகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாக தெரிகிறது.. இந்த விஷயம் சிந்துஜாவுக்கு தெரிந்துவிட்டதால், ஆகாஷிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்..
இன்னொரு பெண்: அவரும் நட்பு ரீதியாகவே பழகிவருவதாக சொல்லியிருக்கிறார். ஆனாலும், சிந்துஜாவுக்கு அந்த பெண்ணுடன் ஆகாஷ் பேசுவது பிடிக்கவில்லை.. இதை வைத்தே காதலர்களுக்கு இடையே நிறைய தகராறு வந்துபோயிருக்கிறது.
நேற்று மதியம் காதலர்கள் 2 பேரும் பூம்புகார் கடற்கரைக்கு பைக்கில் சென்றார்கள்.. பிறகு, பீச்சில் சிறிதுநேரம் இருந்துவிட்டு, மறுபடியும் மாலை 5.45-க்கு அங்கிருந்து கிளம்பி மயிலாடுதுறைக்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, பைக்கில் வரும்போது, அந்த பெண்ணுடன் இனிமேல் பேசக்கூடாது என்று ஆகாஷிடம் சொன்னார் சிந்துஜா.. ஆனால், இதற்கு ஆகாஷ் மறுத்துள்ளார்.
ஆவேசம்: எத்தனை முறை சொல்லியும், ஆகாஷ் தன் பேச்சை கேட்காததாலும், அந்த பெண்ணுடன் தொடர்ந்து பழகுவேன் என்று சொன்னதாலும், சிந்துஜாவுக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது.. இதனால், விசித்திராயர் தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோதே, பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தூக்கி, ஆகாஷ் மீதும், பின்சீட்டில் உட்கார்ந்து வரும் தன்மீதும் எடுத்து ஊற்றி கொண்டு தீயை வைத்துவிட்டார் சிந்துஜா.
இதனால் ஓடும் பைக்கிலேயே 2 பேரின் உடல்களும் பற்றிக்கொண்டு எரிந்தது.. சில நொடிகளிலேயே பைக்கும் பற்றிக்கொண்டு குபுகுபுவென எரிந்தது. நடுரோட்டிலேயே 2 பேரும், பைக்குடன் சேர்ந்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து, அங்கிருந்த வாகன ஓட்டிகள் ஓடிச்சென்று தீயை அணைத்தனர்.. 2 பேரையும் மீட்டு மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும், மயிலாடுதுறை போலீஸாருக்கும் தகவல் தந்தார்கள்.
மயிலாடுதுறை: முதலுதவி சிகிச்சைகள் மட்டும் மயிலாடுதுறை மருத்துவமனையில் முடித்தநிலையில், திருவாரூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்... ஆனால், இருவருக்குமே உடம்பெல்லாம் தீக்காயம் அதிகமாகிவிட்டது.. இருவருமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
படையப்பா படத்துல வர்ற மாதிரி, "அதிகமாக கோபப்படுகிற பெண் நிம்மதியா வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை" என்பது உண்மைதான் போல.. அதுக்காக, இன்னொரு உசுரையுமா சேர்த்து வாங்குறது??












Click it and Unblock the Notifications