மயிலாடுதுறை பீச்சில் அதென்ன.. கிட்ட போய் பார்த்தால்.. அலறியடித்து ஓடிய கூட்டம்.. பரபரக்கும் சீர்காழி
மயிலாடுதுறை: சீர்காழி கடற்கரையில் ஒதுங்கி வந்த பெட்டியால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. இறுதியில் அந்த பெட்டியை திறந்து பார்த்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை.. வரலாறு காணாத வெள்ளம், மழைநீர் காரணத்தினால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது..

பெருங்களத்தூர்: அதனால்தான், பெருங்களத்தூர் நீர்நிலைகளிலிருந்து, முதலைகள் நடுரோட்டுக்கு நகர்ந்து வரும் சூழல் ஏற்பட்டது.. அதேபோல, சென்னையை சுற்றியுள்ள ஏரிகளிலிருந்து, மீன்கள் சாலையில் வெள்ள நீரில் நீந்தி சென்றன.
கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட, சென்னை பெசன்ட் நகர் பீச்சில் டிராகன்கள் வந்துவிட்டன.. பெரும்பாலான கடற்கரையிலும், கரையோர நீர்நிலைகளிலும், ப்ளூ டிராகன்கள் (Glaucus atlanticus) என்ற கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன... வழக்கமாக, இந்த நீல டிராகன்கள் திறந்த கடல் மேற்பரப்பிலேயே காணப்படும்.. சூறாவளி, அல்லது புயல் அடித்தாலோ அல்லது கடல் சீற்றம் ஏற்பட்டாலோ, அல்லது காலநிலை மாற்றங்கள் நடந்தாலோ, எப்போதாவது இப்படி கடற்கரைக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது.
பாதிப்புகள்: அப்படித்தான் பெசன்ட் நகர் பீச்சுக்கு ப்ளூ டிராகன்கள் வந்திருக்கின்றன. லேசான விஷத்தன்மை கொண்ட இந்த டிராகன்களால், சிலசமயம், உடலில் பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறார்கள்.. இந்த டிராகன்கள் கொட்டிவிட்டால், அது பெரிய பிரச்சனையை உண்டுபண்ணிவிடுமாம். பெசன்ட் நகர்பீச்சில் இந்த பேச்சுக்கு நடுவே, மயிலாடுதுறையில் அடுத்த பரபரப்பு பற்றிக்கொண்டது.

சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் மீனவர்கள் நேற்று காலை வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்கள்.. அப்போது, கடலில் ஏதோ ஒரு பொருள் மிதந்து வருவதை பார்த்துள்ளனர்.. அந்த பொருள் மெதுவாக, மிதந்து வந்து இறுதியில் கரை ஒதுங்கிவிட்டது. இதனால், மீனவர்கள் அருகில் சென்று பார்த்தால், அது சிறிய இரும்பு பெட்டி போல இருந்திருக்கிறது.. சந்தன பெயிண்ட் பூசப்பட்ட, ஒன்றரை அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்ட பெட்டியாக காணப்பட்டது.. வெளிப்பக்கத்தில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டிருந்ததாம்.
மர்ம பெட்டி: இதனால் மீனவர்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தார்கள்.. இறுதியில், கடல் சார் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு, கடலோர காவல் குழுமம், க்யூ பிரிவு, தனிப்பிரிவு குழுவினருடன் போலீசார் திரண்டு வந்தனர். அந்த சந்தன நிற பெயிண்ட் பூசப்பட்ட, மிதந்துவந்த அந்த பெட்டியை கைப்பற்றிய போலீசார், கடற்கரையில் பாதுகாப்பாக வைத்தனர்..
பிறகு, பொதுமக்கள் யாரையும் சீலிடப்பட்ட பெட்டியின் அருகே செல்ல வேண்டாம் என்றும் வார்னிங் தந்தனர். அந்த சந்தன கலர் பெட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து அங்குள்ள மீனவர்களிடம் விசாரணையை மேற்கொண்ட போலீசார் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கும் வரவழைக்கப்பட்டு, அவர்கள் உதவியுடன் பெட்டியை திறந்து பார்க்க முடிவு செய்தனர்.

சீலிடப்பட்ட பெட்டி: அதன்படி, மயிலாடுதுறை எஸ்பி மீனா விரைந்து வந்து கரை ஒதுங்கிய பெட்டியை பார்வையிட்டார். எஸ்பி முன்னிலையிலேயே பெட்டி திறக்கப்பட்டது..
அதற்குள்ளே காகித அட்டை போன்ற பொருட்கள் இருந்தது... அவை பார்ப்பதற்கு போதை பொருட்கள் போலவே இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.. வெறும் அட்டையை பூட்டி சீலிடப்பட வாய்ப்பில்லை என்பதால், அதுகுறித்து ஆய்வு செய்ய போலீசார் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனால் இப்பகுதியில் பரபரப்பு இன்னமும் நீடித்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications