மயிலாடுதுறை லோக்சபா தொகுதி: 12-வது முறையாக வென்று புதிய வரலாறு எழுதுமா காங்கிரஸ்?
மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அதிகமான முறை வென்ற தொகுதி மயிலாடுதுறை என்ற பெருமையை இம்முறை அக்கட்சி தக்க வைக்குமா? என்பது எதிர்பார்ப்பு.
மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம். காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று சொல்லும் அளவுக்கு 11 முறை வென்ற தொகுதி. அதிமுக 2 முறை, திமுக 1 முறை வென்ற தொகுதி.

மயிலாடுதுறை லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள் 15,38,351: ஆண்கள்- 7,56,846; பெண்கள் - 7,81,436; 3-ம் பாலினத்தவர் 69.
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஓ. எஸ். மணியன்(அதிமுக) 3,64,089
மணிசங்கர் அய்யர்(காங்கிரஸ்) 3,27,235
கே. பாண்டியன் (தேமுதிக) 44,754
ஜவாஹிருல்லா(மனிதநேய மக்கள் கட்சி) 19,814
கார்த்திகேயன்(பாஜக) 7,486
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஆர். கே. பாரதி மோகன்(அதிமுக )5,13,729
ஹைதர்அலி(மனிதநேய மக்கள் கட்சி) 2,36,679
அகோரம்( பா.ம.க) 1,44,085
மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) 58,465
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் - 28 ஆண்டுகளுக்கு பின் திமுக போட்டியிட்டு வென்றது.
ராமலிங்கம் (திமுக) 5,99,292
ஆசைமணி (அதிமுக) 3,37,978
செந்தமிழன் (அமமுக) 69,080
சுபாஷ்னி (நாம் தமிழர் கட்சி) 41,056
ரெபயுதின்(மக்கள் நீதி மய்யம்) 17,005
2024ம் ஆண்டு தேர்தல் களத்தில்
சுதா (காங்கிரஸ்)
பாபு (அதிமுக)
ஸ்டாலின் (பாஜக)
காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி)
மயிலாடுதுறை கள நிலவர்ம என்ன?: காங்கிரஸ் எம்பிக்களாக முதுபெரும் தலைவர் மறைந்த மரகதம் சந்திரசேகர், பக்கீர் முகமது, மணிசங்கர் அய்யர், பிவி ராஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். 1951-ல் இரட்டை உறுப்பினர் முறை அமலில் இருந்த காலத்தில் காங்கிரஸ் எம்பியாக சந்தானம் இருந்தார். பின்னர் தனித் தொகுதியாக மாற்றப்பட்ட போது 1962-ல் மகரதம் சந்திரசேகர் எம்பியாக இருந்தார். 1967, 1971-ல் திமுக தொடர்ந்து இத்தொகுதியில் வென்றது. 1977, 1980, 1984, 1989, 1991-ல் தொடர்ந்து காங்கிரஸ் மயிலாடுதுறையில் வெற்றி வாகை சூடியது. குடந்தை ராமலிங்கம் 2 முறையும் பக்கீர் முகம்மது 2 முறையும் மணிசங்கர் அய்யர் ஒருமுறையும் வென்றிருந்தார். 1996, 1998-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிவி ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி வென்றனர். 1999, 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் அடுத்தடுத்து மணிசங்கர் அய்யர் வென்றார். மயிலாடுதுறை தொகுதியில் மணிசங்கர் அய்யர் 3 முறை வெற்றி பெற்றார். 2009-ல் அதிமுகவின் ஓ.எஸ். மணியன், 2014-ல் அதிமுகவின் பாரதி மோகன், 2019-ல் திமுகவின் ராமலிங்கம் இத்தொகுதியில் வென்றனர். காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கே இந்த தொகுதி ஒதுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இம்முறை யார் வேட்பாளர் என அறிவிக்கப்படுவதில் பெரும் இழுபறியாகி கடைசியில் வழக்கறிஞர் சுதாவை வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ். பாமகவுக்கும் இங்கு வாக்கு வங்கி உள்ளது. அதிமுக கணிசமான வாக்கு வங்கியைக் கொண்ட தொகுதி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications