Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் பாரை மூடிய டிஎஸ்பியின் வாகனம் திரும்ப பெறப்பட்டதா? மயிலாடுதுறை காவல் துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன், நான்கு சக்கர வாகனம் இல்லாமல் நடந்தே அலுவலகம் சென்றதாக ஒரு காணொளி (வீடியோ) வைரலான நிலையில், அந்தக் தகவல் உண்மைக்குப் புறம்பானது என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மறுத்து விளக்கமளித்துள்ளது.

தமிழக மனித உரிமை ஆணையத்தின் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சுந்தரேசன், ஓய்வு பெற்ற காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்ட்டர் ஆகியவற்றின் விசாரணை அதிகாரியாக இருந்து வந்தார்.

mayiladuthurai police tamil nadu

இவர் நடத்திய விசாரணையில் காவல்துறை தரப்பில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.யாக சுந்தரேசன் இருந்து வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் கள்ளச்சாராயம் விற்பனை, மது கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதுபோல், மாவட்டத்தில் அனுமதியே இல்லாமல் செயல்பட்டு வந்த 23 டாஸ்மாக் பார்களுக்குச் சீல் வைத்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் மதுபானக் கடத்தல் தொடர்பாக 1200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதுபோல், பலமுறை எச்சரித்தும், கைது செய்யப்பட்டும் தொடர்ந்து மதுபானக் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாயவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான், டி.எஸ்.பி. சுந்தரேசனின் நான்கு சக்கர அலுவலக வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்கு முன்னர் அமைச்சரின் பாதுகாப்புக்குச் செல்ல சுந்தரேசன் தனது வாகனத்தைக் கேட்டாராம். ஆனால், மாவட்ட காவல்துறை அவருக்கு வாகனத்தைத் தரவில்லை. பாதுகாப்புப் பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்தது. மீண்டும் அவர் பணிக்குத் திரும்பிய நிலையிலும் அவரது வாகனம் கொடுக்கப்படாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, சில நாட்கள் தனது இரு சக்கர வாகனத்தில் சுந்தரேசன் பணிக்குச் சென்று வந்தார். இந்தச் சூழலில், தனது வீட்டிலிருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு அவர் நடந்தே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் நடந்து சென்றபோது பலர் அவரைத் தங்கள் வாகனத்தில் ஏறிக்கொள்ளுமாறு கேட்டபோதிலும் அவர் மறுத்துவிட்டார்.

இந்தச் சம்பவம் வைரலான நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது. "மயிலாடுதுறை டி.எஸ்.பி.யின் வாகனம் திரும்பப் பெறப்பட்டதாகச் சொல்லப்படும் தகவலில் உண்மை இல்லை. கடந்த 11 ஆம் தேதி முக்கிய பணிக்காக அவரது வாகனம் பெறப்பட்டு மாற்று வாகனம் தரப்பட்டது. இன்று அவர் பயன்படுத்தி வந்த அதே வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது" என விளக்கமளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+