வாத்தியார் செய்த வேண்டாத வேலை.. பூஜை அறையில் விபரீத முடிவெடுத்த மாணவி! மலைத்த மயிலாடுதுறை!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தன்னிடம் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, மாணவியின் தற்கொலைக்கு காரணமாயிருந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளார். ஆசிரியர் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி சாலைமறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரக எல்லைக்குள்பட்ட கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி வீட்டின் பூஜை அறையில் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டு, உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 28-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மனக்குண்ணம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(42) என்பவர் தனது மகளுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அதனை தான் கண்டித்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
புகாரின்பேரில் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஆசிரியர் கார்த்திகேயன் அடிக்கடி அச்சிறுமிக்கு போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்த போலீசார், கார்த்திகேயனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக கடந்த 28 ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் 194 பிஎன்எஸ் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த நிலையில் கிராமமக்கள் மாணவி படித்த பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி சாலைமறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் கார்த்திகேயன் காதல் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications