தலைநிமிரும் மயிலாடுதுறை.. நேரா கலெக்டர் கிட்ட வந்துட்டாங்க.. ஹைலைட்டே அங்கதான்.. குஷியில் விவசாயிகள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடந்த சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை தந்துள்ளது.. இது தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மொத்தமாக நீரில் மூழ்கிவிட்டன.

தரங்கம்பாடி: இதன் அடிப்படையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது... ஆனால், தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகாவில் உள்ள கடக்கம், அகர ஆதனூர், பெரம்பூர், முத்தூர், அகர வல்லம், கிளியனூர் எடக்குடி, கொடை விளாகம் ஆகிய 8 கிராமங்களுக்கு மட்டும் பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
அதனால், நிவாரணம் வழங்க வேண்டும் என்று இங்குள்ள விவசாயிகள் பலமுறை மனு அளித்தனர்.. போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.. இறுதியில், நிவாரணம் வழங்கப்படாத 8 கிராம விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று, மாவட்ட கலெக்டர், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்..

மயிலாடுதுறை: இதன் அடிப்படையில், விடுபட்டு போன மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 8 கிராம விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் உளுந்து பயிர்கள் நிவாரணம் என மொத்தம், 5 கோடி 86 லட்சம் ரூபாய் சமீபத்தில் தமிழக அரசு ஒதுக்கி, அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது. இதனால், ஏகப்பட்ட மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், தமிழக அரசிடமிருந்து நிவாரணத் தொகையை பெற்றுத்தந்த மாவட்ட கலெக்டருக்கு நன்றிகளை தெரிவிக்க முயன்றனர்.

ஆனால், தங்கள் நன்றியை வித்தியாசமாக தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, மேளதாள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக, கலெக்டர் ஆபீசுக்கு வந்தார்கள்.. அப்போது கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.. கையில் மாலைகளும், முகத்தில் மலர்ச்சியுமாக வந்துநின்ற விவசாயிகளை பார்த்து, மாவட்ட கலெக்டர் மகாபாரதி நெகிழ்ந்து போனார்..
கேடயங்கள்: ஆட்சியருக்கு கேடயங்களையும், சால்வைகளையும் அணிவித்து மகிழ்ந்தனர் விவசாயிகள்.. மேலும், தங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும் மாவட்ட கலெக்டர் மகாபாரதிக்கு சிலை வைப்போம் என்றும் பூரித்து சொன்னார்கள்.. அதுமட்டுமல்ல, குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகளையும் வழங்கினர்..
இதில் முக்கியமான ஹைலைட் என்னவென்றால், வெள்ள நிவாரண நிதியாக, ரூ.10 ஆயிரம் ரூபாயை, விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து மாவட்ட கலெக்டரிடம் தந்துவிட்டு போனார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications