ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது… 40 தொகுதிகளில் வைகோ பிரச்சாரம்
சென்னை: மதிமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகோ பிரச்சார சுற்றுப்பயணமும் நாளை வெளியாகிறது.
பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், ஈரோடு, தூத்துக்குடி, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகள் ஏற்கனவே ம.தி.மு.க.வுக்கு உறுதி செய்யப்பட்டு விட்டது. மீதம் உள்ள மூன்று தொகுதிகளாக ஸ்ரீபெரும்புதூர் தென்காசி, கடலூர், தேனி ஆகியவற்றில் மூன்றை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

ஏழு தொகுதி உறுதி
நேற்று நடந்த இறுதிகட்ட பேச்சு வார்த்தையின் போது ம.தி.மு.க. போட்டியிடும் 7 தொகுதிகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டன. பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார்.
விருதுநகரில் வைகோ
இதையடுத்து, ம.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் தயாராகி உள்ளது. வைகோ விருதுநகரில் போட்டியிட முடிவு செய்துள்ளார். மற்ற தொகுதிகளிலும் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டது.
வேட்பாளர் பட்டியல்
ம.தி.மு.க. வேட்பாளர்கள் 7 பேரின் பெயர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதை வெளியிடுகிறார்.
சுற்றுப்பயண விபரம்
இதுபோல், வைகோவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயண விவரமும் நாளை வெளியிடப்படுகிறது. ம.தி.மு.க. தலைமைக் கழகம் இதை வெளியிடுகிறது.
40 தொகுதிகளில் வைகோ
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வைகோ சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications