மீண்டும் புழல் சிறை சென்றார் வைகோ.. எதற்குத் தெரியுமா?
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புழல் சிறையில் சந்தித்தார்.
சென்னை : குண்டர் தடுப்புச் சட்டம், வழக்குக்கு மேல் வழக்கு என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை வைகோ இன்று புழல் சிறையில் சந்தித்தார்.
மே17ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் அனுமதியின் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்றதால் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, கடந்த 29-ஆம் தேதி, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின்கீழ் திடீரெனக் கைது செய்யப்பட்டனர். திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறித்து தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது, கடந்த 2016 ஆம் ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போராடியது உள்ளிட்ட வழக்குகளில் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக இன்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான திருமுருகன்காந்திக்கு இந்த வழக்கில் மட்டும் ஜாமின் கிடைத்துள்ளது.
எனினும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் திருமுருகன் காந்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று புழல் சிறைக்கு சென்று திருமுருகன்காந்தியை நேரில் சந்தித்தார். அப்போது வழக்குகளைக் கண்டு மனம் அஞ்சாமல் இருக்கும் திருமுருகன்காந்திக்கு வைகோ வாழ்த்துகளை சொன்னதாக தெரிகிறது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications