நரேந்திர மோடி மாநாடு: ம.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பு குழு- வைகோ அறிக்கை

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்தில், பா.ஜ.க- ம.தி.மு.க., கூட்டணி உறுதியாகியுள்ளது. அதனால், ம.தி.மு.க., தலைமை அலுவலகமான தாயகத்திற்கு, பா.ஜ.க தலைவர்கள், சமீபத்தில் சென்று அதிகாரப்பூர்வமாக பேச்சு நடத்தினர்.
இதையடுத்து, தமிழக பா.ஜ.க தலைமையகமான, கமலாலயத்திற்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஞாயிறன்று சென்றார். அவருடன் துணை பொதுச்செயலர், மல்லை சத்யா, பொருளாளர் மாசிலாமணி, மாவட்டச் செயலர்கள் செங்குட்டுவன், ஜீவன், தேர்தல் பிரிவு செயலர், கழககுமார் உட்பட, பலர் சென்றனர்.
பாஜக அணியில் தே.மு.தி.க., பா.ம.க., இடம் பெறுவது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், அடுத்த மாதம், 8ம் தேதி வண்டலூரில் மோடி பங்கேற்கும், பா.ஜ., பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், பா.ஜ. கதலைவர்களுடன், வைகோ முக்கிய ஆலோசனை நடத்தினார்.
வண்டலூரில் மோடி பங்கேற்கும் பாஜக மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழுவில், ம.தி.மு.க., சார்பில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தேர்தல் பணி செயலாளர் கழக குமார், மாவட்ட செயலாளர்கள், பாலவாக்கம் சோமு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர், பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழுவினருடன் இணைந்து பணியாற்றுவர் என்று வைகோ கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications