ம.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் படுகொலை! முன்விரோதம் காரணமா?

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பெருமாட்டு நல்லூர் ஊராட்சி. ம.தி.மு.க. ஒன்றிய அவைத் தலைவரான சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார்.
2011ஆம் ஆண்டு மீண்டும் தலைவருக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில், இதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்களுக்கும், அவருக்கும் நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணிக்கு தனது மகளை ஸ்கூட்டியில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள டியூஷன் சென்டருக்கு அழைத்துச் சென்றார் சம்பத். அப்போது, வழி மறித்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி சாய்த்தது. தனது மகள் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் சரிந்த சம்பத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications