என்ன செய்தாலும் பா.ஜ.க.வால் தமிழகத்தில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது: வைகோ சூளுரை

என்ன நடந்தாலும் பா.ஜ.க.,வால் தமிழகத்தில் அடி எடுத்து வைக்க முடியாது என்று வைகோ தெரிவித்து உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : என்ன செய்தாலும் பா.ஜ.க.,வால் தமிழகத்தில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார்.

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இன்று தனது 96வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இன்று காலை சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.

MDMK General Secretary Vaiko states that BJP will never have its success in Tamilnadu

இன்று காலையில் கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடம், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர். அங்கு அவரை வரவேற்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார

மேலும், பேராசிரியர் அன்பழகனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

MDMK General Secretary Vaiko states that BJP will never have its success in Tamilnadu

அப்போது, குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்களில் வெற்றியை பா.ஜ.க கொண்டாடி வருகிறது. 19 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும், எப்போதும் தமிழகத்தில் பா.ஜ.க.,வால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று தெரிவித்து உள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, பா.ஜ.க வெற்றி வெறும் கூச்சல் தான். ஆனால், அவர்களின் வளர்ச்சியும் வெற்றியும் தேய்பிறை ஆகி வருகிறது இதனால் வெற்றி குறித்து இறுமாப்பு கொள்ள வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+