பரபரப்பான சூழ்நிலையில் நாளை மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்…
சென்னை: மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் பரபரப்பான சூழ்நிலையில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நாளை கூடுகிறது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். பதவி சுகம் அனுபவித்தவர்கள் மட்டுமே இப்போது கட்சியில் இருந்து விலகி வருவதாக வைகோ கூறியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் காஞ்சிபுரம், சேலம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்கள் விலகியுள்ளனர். இதில் இருவர் திமுகவில் இணைந்துள்ளனர். எதிர்காலம் கருதி விலகுவதாக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் கூறியுள்ளார்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் நாளை (19.09.2015 சனிக்கிழமை) பிற்பகல் 03.00 மணிக்கு கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெற உள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பு நாளை (19.09.2015) மாலை 4.30 மணிக்கு சென்னை, தாயகத்தில் நடைபெறும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளர்.

வைகோ பேட்டி
இதனிடையே இன்று மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியை மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்துச்சென்றிருந்தார் வைகோ.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் மட்டுமே கட்சியில் இருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார். மதிமுக தலைவர்களால் உருவானதல்ல... தொண்டர்களால் உருவானதல்ல என்றும் கூறியுள்ளார். எம்.எல்.ஏ, எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டுதான் இப்போதும் பலர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர் என்றும் வைகோ கூறியுள்ளார். அப்போது கட்சியில் மல்லைசத்யாவும் உடனிருந்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications