ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு: வைகோ அதிரடி அறிவிப்பு
ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு தருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு மதிமுக ஆதரவு அளிப்பதாக அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக சார்பில் வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க எழும்பூரில் உள்ள தாயகத்தில் மதிமுக உயர்நிலை குழு கூட்டம் இன்று கூடியது.

கூட்டாட்சி தத்துவம்
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில சுயாட்சியை நிராகரித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைக்கிறது பாஜக.

மொழி, இன பண்பாட்டு உரிமைகள்
தமிழக ஆற்று நீர் உரிமைகள் பறிபோகின்றன. தமிழக முக்கிய பிரச்சனைகளில் மத்திய அரசை தமிழக அரசு தட்டிகேட்கவில்லை. தமிழகத்தின் மொழி, இன பண்பாட்டு உரிமைகள் கேள்விக்குறியாகிவிட்டன.

ஆட்சி அதிகாரத்தை...
கூட்டாட் தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசுசெயல்படுகிறது. அதிமுக அரசை இயக்கும் பாஜக ஆளுநர் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக அரசுக்கும் பாஜகவுக்கும் பாடம் புகட்ட வேண்டும்.

திமுகவுக்குத்தான் மதிமுக ஆதரவு
திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை மதிமுகவுக்கு உண்டு. எனவே இந்த இடைத்தேர்தலில் மதிமுகவின் ஆதரவை திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு அளிக்கிறோம்.

சட்டபேரவையில் தீர்மானம்
நல்லிணக்கமான சூழல் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள நிலையில் இதை தொடக்க புள்ளியாக கருதலாம். இவ்வாறு வைகோ கூறினார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications