கோவில்பட்டியில் ஸ்டாலின் உருவபொம்மை எரிப்பு: மதிமுகவினர் 20 பேர் கைது
திமுக பொருளாளர் ஸ்டாலினை கண்டித்து கோவில்பட்டியில் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி: கோவில்பட்டியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி (92), தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே நேற்று மாலை மதிமுக பொது செயலாளர் வைகோ கருனாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது அங்கே குவிந்திருந்த திமுக தொண்டர்கள் அவருடைய வாகனத்தை சூழ்ந்து கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆத்திரத்தில் இருந்த சில திமுக தொண்டர்கள் வைகோ கார் மீது கற்கள், செருப்புகளை வீசினர். அவர்களின் எதிர்ப்பால் அதிர்ச்சியடைந்த வைகோ திரும்பிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வைகோ மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் எதிரே மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக பொருளாளர் ஸ்டாலினின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து உருவபொம்மை எரித்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications