For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தவிக்கும் பெல்லிராஜ்.. கைகொடுங்கள்... கரை சேர்ப்போம்!

Google Oneindia Tamil News

கோவை: சாதாரண வாந்தி, மயக்கம் என மருத்துவமனைக்குச் சென்ற கோத்தகிரி பெல்லிராஜின் குடும்பம் இன்று பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது.

படத்தில் மனைவியுடன் இருப்பவர்தான் பெல்லிராஜ். கோத்தகிரியில் வசிக்கிறார். 33 வயது, 5 வயதில் ஒரு மகன் உண்டு. பேக்கரியில் வேலை செய்து சொற்ப வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டிருந்த பெல்லிராஜ் குடும்பத்தில் கடந்த ஜூன் மாதம் புயலடித்தது. வாந்தி மயக்கம் என மருத்துவமனைக்கு சென்றவருக்கு மருத்துவர் சொன்ன பதில் இடியாக இறங்கியது!

Medical assistance needed for this poor Bakery worker

"உங்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன! உடனடியாக கோவை செல்லுங்கள்" என அறிவுறுத்தியுள்ளார் மருத்துவர். இவர் கோவை மருத்துவமனைக்கு வந்தபோதே, நிலைமை கைமீறி போய்விட்டது. சிலபல வைத்தியங்கள், டயாலிசிஸ் எல்லாம் செய்து பார்த்தும் பலனில்லை. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என மருத்துவமனை கைவிரித்துவிட்டது. தற்போது கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் (KMCH) சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

பெல்லிராஜின் தந்தை அவரது சிறுநீரகத்தை மகனுக்கு தானமாக கொடுக்கிறார். கொடுத்தாலும், அறுவை சிகிச்சைக்கான செலவு கிட்டத்தட்ட 6.5 லட்சங்களாம்! நோயாளியின் மைத்துனரைத் தவிர குடும்பத்தில் படித்தவர்கள் எவரும் இல்லை.

பெரிதாக வெளி மனிதர்களை சந்தித்திருக்காத மலைவாழ் மக்கள் பெல்லிராஜின் குடும்பத்தினர். அந்த அப்பாவித்தனம் பேச்சிலும் தெரிகிறது. "வாந்தி வரும் சார் கடைல போய் மருந்து வாங்கி சாப்பிடுவாரு சரியா போயிரும். சாதாரண காய்ச்சல்ன்னு நினைச்சிதான் ஆஸ்பிடலுக்கு போனோம்.. இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுட்டாங்க " என்கிறார் அவர் மனைவி, மேற்கொண்டு பேச முடியாமல் அவர் கண்கள் கலங்குகிறது.

தொடர்ந்த பெல்லிராஜ். "இதுவரை 7 லட்ச ரூவா செலவு பண்ணிட்டோம் சார். இனியும் பண்ண எதுவுமே இல்லை. வாங்கின கடனுக்கு பதில் சொல்லிகிட்டு உயிரை காப்பத்திக்கவும் வழி தெரியாம இருக்கோம்.. இந்த சூழல்ல டாக்டர் ஆபரேஷன் பண்ணியே ஆகணும் அதுவும் கூடிய சீக்கிரம் என்கிறார், என்ன செய்ய போறோம்ன்னு தெரியல சார்" என்கிறார்.

இன்றைய சூழலில் பெல்லிராஜ்க்கு ஒருநாள் விட்டு ஒருநாள் டயாலிசிஸ் பண்ண வேண்டும். தவறினால் உயிருக்கே பிரச்சினை ! ஒருமுறை டயாலிசிஸ் பன்ன 2300 ரூபாய் செலவாகிறதாம். வாரத்தில் மூன்று முறை டயலசிஸ் செய்து அவர் உயிரை காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ! அதைத்தவிர ரத்தத்தை தூய்மையாக்கும் ஊசி ஒன்று மாதம் நான்கு முறை போடவேண்டும். ஒரு ஊசியின் விலை 1500 ரூபாய்.!

இவரது நிலை குறித்து கோகுலகிருஷ்ணபோஜன் என்பவர் மூலம் அறிந்த சேலத்தைச் சேர்ந்த பாலா மற்றும் சிம்சன், டாக்டர் டேனியல் மனோரஞ்சன், பேராசிரியர் கே.கே.நடராஜன் உள்ளிட்ட பல நல்லுள்ளங்களும் களம் இறங்கியுள்ளனர்.

பெல்லிராஜ்க்கு தாமதிக்காமல் மாற்று சிறுநீரக ஆபரேஷன் செய்தாக வேண்டும். அதற்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட 6.5 லட்ச ரூபாய். அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலம் 3,70,000 கிடைக்குமாம். மீதமுள்ள தொகை தற்போது அவர்களுக்கு தேவைப்படுகிறது. கோவையில் உள்ள KMCH மருத்துவமனையில்தான் ஆபரேஷன் நடைபெற உள்ளது.

தற்போது அன்பு உள்ளங்களின் உதவி பெருமளவில் தேவைப்படுகிறது. நமது வாசகர்கள் இதுபோன்ற சமயங்களில் நம்பியவர்களை கைவிட்டதில்லை. இப்போது, பெல்லிராஜ் சிகிச்சைக்கு தேவையான உதவிகளையும் நமது வாசகர்கள் தாராளமாக செய்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உள்ளோம்.

இது பெல்லிராஜின் மைத்துனர் மணியின் எண் : +919787981456 - விவரம் அறிய விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்

இது எப்படி சிகிச்சைக்கான உதவியை அனுப்ப வேண்டும் என்பதற்கான விவரம்:

பெயர்: Kovai medical center and hospital Ltd Coimbatore
Acc no : 479294052
Ifsc : IDIB000K169
Bank name : indian bank
Branch : KMCH goldwins branch, Coimbatore -14

இந்த அக்கவுண்டில் "in favour of" எனும் இடத்தில் பெல்லிராஜ் அவர்களின் பெயரை குறிப்பிட்டு அனுப்பவும், ஆன்லைன் ட்ரான்ஸாக்‌ஷன் செய்பவர்கள், "Remarks" என்று குறிப்பிட்டிருக்கும் field ல், "for belliraj kidney transplantation" என குறிப்பிடவும்.

(அன்பு வாசகர்களுக்கு: நீங்கள் அளித்த உதவித் தொகை மற்றும் அதற்கான Reference எண்ணை கமெண்ட் பகுதியில் மறவாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்)

English summary
Kothagiri Belliraj is in need of big help from the kind hearts as he is in dialysis treatment since his both the kidneys are failed. Our readers can help him to make him smile again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X