வேந்தர் மூவிஸ் மதன் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்.. 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வேந்தர் மூவிஸ் மதனை 7 நாள் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை: எஸ்.ஆர்.எம் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 80 கோடி வசூல் செய்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் மூவேந்தர் மூவிஸ் மதன். இவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலைக் கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக ரூ.80 கோடி வசூலித்து மோசடி செய்து தலைமறைவானார் மதன். இதனைத் தொடர்ந்து அவரது தாயார் தங்கம் ஆட்கொணர்வு வழக்கும் தொடர்ந்தார். மேலும், மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கி தருவது தொடர்பாகவும் வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, தொடர்ந்து மதனை போலீசார் தேடி வந்தனர். மேலும், மதனை பிடிக்க போலீசாருக்கு ஐகோர்ட்டும் கெடு விதித்திருந்தது. இந்த நிலையில் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை சென்னை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
இதனையடுத்து, இன்று காலை சைதாப்பேட்டை கோர்ட்டில் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மதனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மதனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications