For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்த ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் கிரிஜா - வீடியோ

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க தலைமைச் செயலர் கிரிஜா தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் விழுப்பிணர்வு ஏற்படுத்தவும் தலைமை செயலர் தலமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் உள்பட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் வேகமாக பரவி வரும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக பருவமழை தொடங்கும் முன்பே, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அரசு செயலர்கள் கூடி மழைக்குப் பிறகு ஏற்படும் சுகாதாரக் கேடுகள், தொற்றுநோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து ஆலோசனை நடத்துவது வழக்கமாக நடைபெறும்.

English summary
In Secretariat, consultation meeting held and chief secretary Girija Vaidhyanathan headed the meeting and agenda of the meeting was preventing dengue in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X