ஓபிஎஸுக்கு “பேக் பயர்”.. சபரீசனை சந்தித்து இருக்கக்கூடாது? திமுகவுக்கு என்ன பலம்? விளக்கும் பிரியன்
சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலின் மருமகன் சபரீசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதால் அவருக்கு பின்னடைவுதான் என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்து உள்ளார்.
"அதிமுகவை சேர்ந்த ஒரு தலைவர் சாதாரணமாக திமுகவை சேர்ந்தவரை சந்தித்தாலே அது செய்திதான். எம்ஜிஆர் கூட பிற கட்சியினரை சந்திப்பதை சகித்துக்கொள்வார். திமுக ஆட்களை அதிமுகவினர் சந்திப்பதை ஜெயலலிதா சகித்துக்கொள்ளவே மாட்டார். திமுக ஆட்கள் வீட்டில் அதிமுகவினர் சம்பந்தம் வைத்துக்கொண்டாலே திருமணத்துக்கு செல்ல மாட்டார் ஜெயலலிதா.
இதுபோன்ற வழியில் வந்த ஒரு இயக்கம் தற்போது பிளவுபட்டு இருக்கும் சூழலில், ஓபிஎஸுக்கு திமுக சட்டசபையில் ஆதரவாக உள்ளது என்ற குற்றச்சாட்டை எடப்பாடி தரப்பு முன்வைக்கிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓபிஎஸை நீக்கிவிட்டு உதயகுமாரை நியமித்துவிட்டதாகவும், இதனை ஏற்குமாறும் அவர்கள் கோருகின்றனர்.

ஆனால் சபாநாயகர் ஏற்க மறுக்கிறார். யாரை எங்கு அமர வைப்பது என்று எனக்கு தெரியும். அது என்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டது என சபாநாயகர் சொல்கிறார். சபாநாயகர் தனது விதிப்படி சென்றுகொண்டிருக்கிறார். இவர்கள் பார்வையில் சபாநாயகர் ஓபிஎஸுக்கு ஆதரவாக இருப்பதாக நினைக்கிறார்கள். எடப்பாடி தரப்பு தொடர்ந்து பன்னீர்செல்வத்தை திமுகவின் பி டீம் என்றுதான் சொல்கிறார்கள்.
ஓபிஎஸ் தரப்போ, எடப்பாடி தரப்புதான் திமுகவுக்கு நெருக்கமாக இருப்பதாகவும், அமைச்சர்கள் 10 பேர் வீட்டில் நடந்த ரெய்டு, கொடநாடு வழக்கு போன்றவற்றில் அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்யவில்லை என்று சொல்கிறார்கள். இவர்கள் இருவருடைய நோக்கமும் என்னவென்றால் விரக்தியில் உள்ள அதிமுக தொண்டர்கள் எதிர்தரப்பினரை வெறுக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால் திமுக வெறுப்பிலேயே வளர்ந்தவர்கள் அதிமுக தொண்டர்கள்.
திமுக எதிர்ப்பில் இருக்கும் அதிமுக தொண்டர்களை கவர்வதற்கான விசயமாகவே நாம் இதை பார்க்கிறோம். முதலமைச்சர் சொல்வது என்னவென்றால் ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்க சில அனுமதிகளை பெற வேண்டி உள்ளது என்கிறார். ஆளுநர் என்று அவர் சொல்லவில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைக்கு ஆளுநர் தடையாக உள்ளார். எப்போது ஸ்டாலின் அதை வெளிப்படையாக சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை.
ஒபிஎஸை திமுகவின் பி டீம் என்று சொல்லி வரும் நிலையில், உச்சக்கட்டமாக சபரீசனுடன் சந்திப்பு நடந்து உள்ளது. ஓபிஎஸ் தனது பேரன், பேத்திகளுடன் ஐபிஎல் பார்க்க சென்றார். கலைஞர் கருணாநிதி அரங்கத்தில் அமர்ந்து கிரிக்கெட் பார்த்தார். கிரிக்கெட் போட்டியில் பார்ப்பதை தவறு என்று சொல்ல முடியாது. வலுவான எதிர்க்கட்சியான அதிமுக பிளவுபட்டு கிடப்பது திமுகவுக்கு வலு சேர்க்கிறது.
எடப்பாடியின் பதவி ஆசையின் காரணமாகவே அதிமுக பிளவுபட்டு உள்ளதே தவிர, திமுகதான் பிளவை ஏற்படுத்தியது என்று சொல்ல முடியாது. இந்த பிளவு தங்களுக்கு சாதகமாக இருப்பதால், இது நீடிக்க வேண்டும் என்று கூட திமுக நினைக்கலாம். வலுவான அதிமுகவாக இருந்தால் ஆளும்கட்சிக்கு எதிராக வலுவாக எதிர்க்கட்சி அரசியல் செய்ய முடியும். ஆனால், அந்த சூழல் இல்லை.

நேற்றைய சபரீசன் உடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று சொல்கிறார்கள். ஆனால், இதுபோன்ற விமர்சனங்களுக்கு அது வழிவகுத்து உள்ளது. இதனை ஜெயக்குமார் விமர்சித்தாலும் இன்று திமுகவின் 2 ஆண்டு ஆட்சியை ஓபிஎஸ் கடுமையாக அறிக்கையில் விமர்சித்து உள்ளார். திமுக இந்த பிளவை ரசிப்பதாக சொன்னேனே தவிர இந்த பிளவுக்கு காரணம் என்றோ, அதை விரும்புவதாகவோ சொல்லவில்லை.
ஓபிஎஸ் திமுகவுடன் நெருங்கி இருப்பதால் எந்த விதத்தில் அவருக்கு லாபம்? இதை அரசியல் முதிர்ச்சியுடன் பார்த்தால் தனியாக சந்தித்து ஒரு அறையில் பேசி இருக்க வேண்டாம். அப்போது அவர்களுடன் யார் இருந்தார்கள் என்று நமக்கு தெரியாது. அது தனிப்பட்ட சந்திப்பாக இருக்க வாய்ப்பு இல்லை. இவர்கள் இருவரும் அரசியல்பேசி நாளை ஓபிஎஸ் திமுகவுடன் இணைய வாய்ப்பில்லை. சபரீசனும் நீங்கள் இதுபோல் பிரிந்தே இருங்கள் என்று சொல்லவும் வாய்ப்பு இல்லை.
ஓபிஎஸின் நோக்கம் பாஜகவை நோக்கி செல்வதாகவே உள்ளது. அமித்ஷா அனைவரையும் ஒன்று சேர்ந்து வர சொல்கிறார். ஓபிஎஸுக்கு திமுகவுடன் நெருக்கமாக இருப்பதாலோ, இணைந்து இருப்பதாலோ எந்தவிதமான அரசியல் லாபமும் கிடையாது. அண்ணாமலை எங்களோடு பயணித்தவரை விட முடியாது என்று ஓபிஎஸைதான் சொன்னார். இதையேதான் அமித்ஷாவும் சொன்னார். ஓபிஎஸும் திமுகவும் இணைவதால் அதிமுக தொண்டர்களிடம் கெட்டப்பெயர்தானே தவிர எந்த நல்லதும் இல்லை. சபரீசனுடனான சந்திப்பை அவர் தவிர்த்து இருக்கலாம் என்பதே எனது கருத்து.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications