கட்ட வேண்டாம் ரூ.2 லட்சம்! திருப்பத்தூர் பெண்களுக்கு அரசின் ரூ.10 லட்சம் லோன்.. உடனே அப்ளை பண்ணுங்க
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும், பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.. மேலும், 0 லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய தொழில் கடனை இப்போது பெற விண்ணப்பிக்கலாம் என்றும் திருப்பத்தூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. "தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை தொழில் அதிபர்களாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் இலக்காகும்.

திருப்பத்தூர் பெண்களுக்கு மெகா ஆஃபர்
குறிப்பாக கிராமப்புறங்களில் மூன்று லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ், புதிய உற்பத்தித் தொழில்கள், சேவை சார்ந்த பணிகள், உணவுப் பதப்படுத்துதல், சில்லறை ஜவுளி விற்பனை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் (நேரடி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நீங்கலாக) தொடங்க விரும்புவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கடனுதவி - மானியம்
விண்ணப்பிக்கும் பெண்களுக்குத் தேவையான தொழில் முனைவோர் பயிற்சிகளும் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும்.
தொழிலைத் தொடங்க அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், திட்ட மதிப்பீட்டில் இருபத்தைந்து சதவீதத் தொகை, அதாவது அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாகவே வழங்குகிறது. இது பெண்களுக்கு நிதிச் சுமையைக் குறைத்து தொழிலில் வெற்றி பெறப் பேருதவியாக இருக்கும்.
தகுதியுடையோர் - ஆவணங்கள்
இந்த அரிய வாய்ப்பைப் பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், பதினெட்டு முதல் ஐம்பத்தைந்து வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் புதிய திட்டத்தில் இணைவதற்கு எந்தவிதமான அடிப்படைக் கல்வித் தகுதியோ அல்லது குடும்ப ஆண்டு வருமான வரம்போ நிபந்தனையாக விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆர்வமுள்ள அனைத்துப் பெண்களும் தாராளமாக முன்வரலாம்.
விண்ணப்பிப்பதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கைபேசி எண், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் நீங்கள் வாங்க உத்தேசித்துள்ள தொழில் இயந்திரங்களின் விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்கள் போதுமானவை. திருப்பத்தூர் மாவட்டப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு ஜாக்பாட்
தகுதியுள்ளவர்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.msmeonline.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விளக்கம் தேவைப்படுவோர் திருப்பத்தூர் எழில் நகரில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரிலோ அல்லது 04179-299099 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி அந்த மாவட்டத் தொழில் மையங்கள் வழியாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம்" என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications