தீபக் தம்பி..டின்னருக்கு காசு இருக்கா..?இல்ல அம்மா உணவகமா? தீபக்கை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
திடீரென நேற்று சசிகலா குடும்பத்துக்கு எதிராக பொங்கிய ஜெ.தீபக்கை நெட்டிசன்கள் ஆசை தீர கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக அவர்கனின் பின்னணியிலேயே இருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேற்று திடீரென பொங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு டிடிவி தினகரன் தகுதியற்றவர் என்று அவர கூறினார். அதிமுக பொதுச் செயலாளராக அண்ணன் ஓபிஎஸ் தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தீபக் கூறினார்.
இதுவரை சசிகலா குடும்பத்தோடு இருந்துகொண்டு சகோதரியை எதிர்த்த அவர் திடீரென பாச மழை பொழிந்தார். தீபக்கின் இந்த அதிரடி மாற்றம் சற்று இளைப்பாறிய டிவி சேனல்களுக்கு மீண்டும் பிரேக்கிங் நியூஸ்களை கொடுத்தது.
தீபக்கின் இந்த திடீர் மாற்றத்தால் வியப்படைந்த நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் வைத்து செய்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
'அங்க' போயிடுச்சாம்
இவருக்கு கொடுக்க வேண்டிய காசை புரோக்கர் வைகோவுக்கு கொடுத்துட்டாங்களாம்
|
கட்சியை உடைங்க
சட்டுப்புட்டுன்னு கட்சியை உடைங்கடா
|
காத்தடிக்குது
ஜெ தீபக் ஓபிஎஸ்க்கு ஆதரவு காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டு காத்தடிக்குது
|
பிரேக்கிங் நியுஸ் கேட்க காது இல்ல
அ.தி.மு.க தலைமை பதவிக்கு தினகரனுக்கு தகுதியில்லை-ஜெ.தீபக். போங்கய்யா_புண்ணாக்கு பக்கிகளா இனிமேயும் பிரேக்கிங் நியுஸ் கேட்க காது இல்ல.
|
கடன் கேட்டிருக்கேன்
நூறு கோடியா - அது அந்தா முக்குல இருக்க டீ கடை அண்ணங்கிட்ட கடன் கேட்டிருக்கேன். கட்டி போயஸ் வீட்டை மீட்டிருவேன் - ஜெ தீபக் (டேய்ய்ய்ய்)
|
தீபக் பேரவை ஆரம்பிங்கப்பா
யாரவது ஜெ தீபக் பேரவை ஆரம்பிங்கப்பா
|
ரூ.100 கோடியை நானே கட்டுறேன்
அத்தைக்காக 100 கோடி அபராதத்தை கட்டுவேன் - ஜெ.தீபக் தம்பி...டின்னருக்கு காசு இருக்கா...?இல்ல அம்மா உணவகமா?
|
இப்ப தான் கன்பார்ம் ஆச்சு
ஜெயா மரணத்தில் எனக்கும் சந்தேகம் இருக்கு-ஜெ. தீபக்
மக்கள்: எங்களுக்கு சந்தேகம் இல்லை, இப்ப தான் கன்பார்ம் ஆச்சு.
|
தியாகங்களை போற்ற வேண்டும்
அம்மா செய்த தியாகங்களை மக்கள் போற்ற வேண்டும் - தீபா. எதுடா கண்ணு.. கொள்ளையடிச்சுட்டு ஜெயிலுக்கு போனதையா...
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications