ஆர்கே நகரில் டிடிவி தினகரனுக்கு ஆண்கள் கூட ஆரத்தி எடுக்கும் அலப்பறை!
ஆர்கே நகரில் போட்டியிடும் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆரத்தி எடுக்க ஆண்களும் பள்ளி சிறுமிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னை: ஆர்கே நகரில் அதிமுக அம்மா வேட்பாளர் தினகரனுக்கு ஆரத்தி எடுக்க ஆண்களும் சிறுமிகளும் கூட போட்டி போடுகின்றனர். ஆரத்தி எடுப்பவர்களுக்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது.
ஆர்கே நகரில் நடக்கவுள்ள இடைதேர்தலையொட்டி அப்பகுதியே பிரமாண்ட திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. டிடிவி தினகரன் செல்லுமிடங்களில் அவருடன் செல்லும் ஆட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், அவர் வரும் இடங்களில் எல்லாம் ஆண்களும் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளும் ஆரத்தி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

உடலில் தொற்று ஏற்படுகிறது என்பதால் பெரும்பாலான இடங்களில் வண்டியிலேயே நின்று பிரச்சாரம் செய்கிறார். இருந்தாலும் மக்கள் அவர் இருக்கும் இடத்துக்கு நேரே சென்று ஆரத்தி எடுக்கின்றனர். இதில் ஆண்கள் கூட எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆரத்தி எடுக்கின்றனர். பள்ளி செல்லும் சிறுமிகள் ஆரத்தி எடுக்கும்போது மிகவும் சிரமப்பட்டு தலையை குனிந்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்கிறார். இதற்காக, அவர் பிரச்சாரத்துக்கு செல்லுமிடங்களில் பலர் ஆரத்தி தட்டுடன் இருக்கின்றனர்.
இந்த ஆரத்தி ஆர்வத்துக்குக் காரணம் ஒரு ஆரத்திக்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது என்பதால் போட்டி போட்டுக்கொண்டு ஆரத்தி எடுக்கின்றனர். தமிழ் கலாச்சார வழக்கப்படி, ஆரத்தி என்பது பெண்கள் மட்டுமே செய்யும் சடங்கு. பணத்துக்கு முன்னால் கலாச்சாரமாவது...கருப்பட்டியாவது!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications