நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்திய மெர்சல் 'நச்' வசனங்கள் இவைதான் !
பாஜகவினர் கோபத்தில் ஆழ்த்திய மெர்சல் பட வசனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
சென்னை : பாஜகவினரை கோபத்தில் ஆழ்த்தி, நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய மெர்சல் படத்தின் வசனங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மாநிலம், தேசியம் என இரு வரிகளும் ஒன்றாக சேர்த்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் அத்தியாவசிய பொருள்களுக்கு அதிக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் உயிரைக் கெடுக்கும் சாராயத்துக்கு ஜிஎஸ்டியே கிடையாது.
இதனால் பாஜக மீது நாடு முழுவதும் அதிருப்தி நிலவியது. மேலும் எதிர்த்து கேள்வி எழுப்பியவர்களின் வாயை பாஜகவினர் எதையாவது சொல்லி அடைத்து வந்தனர்.

பாஜகவை டென்ஷனாக்கியது
விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது பாஜகவை கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டது.

தமிழிசை கேட்கும் தாறுமாறான கேள்விகள்
ஜிஎஸ்டி குறித்து மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். மேலும் மக்கள் நலன் சார்ந்த படம் என்றால் இலவசமாக மக்களுக்கு காட்ட வேண்டியதுதானே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் பேசும் அதிரடி வசனம்
இந்நிலையில் பாஜக கோபமடைய காரணமாக இருந்த விஜய் பேசும் வசனங்கள் வீடியோ காட்சிகளாக தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வசனம் இதுதான்: 7 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூர் அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவத்தை இலவசமாக தரப்போ 28 சதவீத ஜிஎஸ்டி வாங்கும் நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமாக தர முடியல.

சாராயத்துக்கு ஜிஎஸ்டியே கிடையாது
மெடிசினுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டியாம், ஆனால் தாய்மார்களின் தாலியை அறுக்கும் சாராயத்துக்கு ஜிஎஸ்டியே கிடையாது. நம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை. என்னடா காரணம் கேட்டா, ஆக்சிஜன் சப்ளை பன்ற நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம்.

தனியார் மருத்துவமனைகளின் முதலீடு
இன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டல் டையாலிசிஸ் பன்றப்ப கரென்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை. இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெரிச்சாலி கடிச்சு இறந்தத நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும். ஜனங்க நோயை பார்த்து பயப்படறத விட கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ஸ பார்த்துதான் பயப்படறாங்க. அந்த பயம்தான் பிரைவேட் ஆஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்மென்ட் என்று விஜய் வசனம் பேசியுள்ளார்.

மெடிக்கல் சிஸ்டம்
அப்ப உங்க கொலையை நியாயப்படுத்த பாக்கிறீங்களா என படத்தில் செய்தியாளர் ஒருவர் விஜய்யிடம் கேள்வி எழுப்புகையில், நான் செஞ்சது கொலையே இல்ல. எவன் சொன்னான். செல்லரிச்சு போன மெடிக்கல் சிஸ்டதோட கிளீனிங் பிராசஸ் என்று விஜய்யின் வசனம் இடம்பெற்றுள்ளன. இந்த வசனங்கள்தான் பாஜகவை கோபப்படுத்தியுள்ளது. இதன் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications