சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் : மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு அருகே 240 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல நகரங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி வந்த நிலையில், சனிக்கிழமையன்று தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரைக்கு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அது தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, திங்கள்கிழமை வட மேற்கு நோக்கி நகர்ந்தது.

சென்னையில் விடிய விடிய மழை
காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் பல இடங்களில் பரவலாக நேற்று நள்ளிரவு நேரத்திலும் இன்று காலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் வெப்பம் மறைந்து குளுமையான காற்று வீசியது. சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாவட்டங்களில் கனமழை
சென்னை அருகே 240 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதனால் வடமாவட்டங்களில் பெரும்பலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிக கனமழை எச்சரிக்கை
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

தரைக்காற்று வீசும்
மீனவர்கள் 48 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம். தரைக்காற்று அதிகமாக வீசும். அதிகபட்மாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 14 செ.மீ மழை பெய்துள்ளது. இவ்வாறு கூறினார்.

பாம்பனில் 1ம் எண் கூண்டு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகை - கடலூரில் 3ம் எண் கூண்டு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் துறைகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் 3ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம்
திங்கள்கிழமை இரவு முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
செம்பரம்பாக்கம் பகுதியில் 120 மி.மீ மழை பெய்துள்ளது. சோழவரம் 37, தாமரைப்பாக்கம் 37, செங்குன்றம் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications